Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Tuesday 12 February 2013

மதுக்கரை கிராமத்தில் தக்காளி விளையும் பூமியில் புல் கூட தலை காட்டவில்லை,

மதுக்கரை கிராமத்தில் தக்காளி விளையும் பூமியில் புல் கூட தலை காட்டவில்லை,
பனைமரத்தின் ஓலைகள் காய்ந்து செத்து வீழ்ந்தன ,
வெத்தலை மென்னும் மூதாட்டியின் கண்கள் என் வருகையை உற்று நோக்க ,
நாச்சிப்பாளையம் என்னும் தக்காளி மண்டியில் ஆடுகள் சொத்தைப்ப...ழங்களை ருசிக்க ,
வழுக்குப்பாறை கிராமத்தில் மரங்கொத்தி என் கண்முன் நின்றது ,
சொக்கனூரில் செம்பூத்துப் பறவை என் வருகையை ஊருக்கு அறிவித்தது ,
முத்துக்கவுண்டனூர் பள்ளியில் மழலைகள் ஓடி விளையாட ,
அன்று கிளிகள் பறந்து-பறந்து பழம் உண்ட ஆலமரமோ இன்று ஒதுங்க கூட நிழலில்லை,
வாழ இடம் , உண்ண பழம் இல்லை ,
கொண்டைலாத்தி பறவை மரண ஓலம் இட்டது ,
புளியமரங்களில் மைனாக்கள் ருசி பார்க்க ,
பனங்காடை வெயிலில் தாகமாய் அலைய ,
என் முருகன் குடிகொண்ட பசுந்தலைகள் நிறைந்த முத்துமலையோ பாலை நிலமாக காட்சியளிக்க ,
தென்னை மரங்கள் தலையறுத்து தொங்கின ,
வேப்பமரங்கள் காய்ந்து கருகின ,
அரசமர விழுதில் கருங் காக்கைகளோ மெலிந்து சக்தியற்று அமர்ந்தன ,
மண்ணில் ஈரம் கொஞ்சம் கூட தலை காட்டவில்லை ,
விவசாயி உடல் மெலிந்து மழை வேண்டி நின்றான் ,
என் கண்களோ இவைகளைக் காண என்ன பாவம் செய்ததோ ?
மாரி அன்னை எமக்கு அன்ன பிரசாதம் ஊட்டினால் ,
புற்றிடத்தில் குடி கொண்ட சிவபெருமானோ சிவபுராணம் படிக்க வாய்ப்பு தந்தார் ,
ஆஞ்சநேயர் சுண்டல் பிரசாதம் ஊட்டினார் ,
அமாவாசை இரவோ இருளை பரப்ப ,
வீடு நோக்கி உருண்டது என் வாகன சக்கரங்கள் ,
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள்(09-02-2013)
இடம் : பாலத்துறை -வழுக்குபாறை -முத்துகவுண்டனூர்-ஒத்தக்கால்மண்டபம்
கோவை மாநகராட்சி (தெற்கு மண்டலம்)
Bird watching in Sunday Morning with School Kids(10-02-2013)
பறவைகளுடன் விடியல் காலை (10-02-2013)
1.Spotted Munia
2.House Sparrow
3.Purple Sunbird
4.Lotens Sunbird
5.Small Sunbird
6.Purple Rumped Sunbird
7.Large Pied Wagtail
8.Yellow Wagtail
9.Paddy Field Pipit
10.Indian Robin
11.Oriental Magpie Robin
12.Common Tailor Bird
13.Ashy Prinia
14.Babbler’s
15.Red-Vented Bulbul
16.Red-Whiskered Bulbul
17.White Browed Bulbul
18.Common Iora
19.House Crow
20.Indian Treepie
21.Common Myna
22.White-Bellies Drongo
23.Black Drongo
24.Eurasian Golden Oriole
25.Red-Rumped Swalow
26.Lesser Golden-Backed Woodpecker
27.Copper Smith Barbet
28.Chestnut-Headed Bee-Eater
29.Indian Roller
30.Common Hoopoe
31.White-Breasted Kingfisher
32.Lesser Pied Kingfisher
33.Small Blue Kingfisher
34.House Swift
35.Spotted Owlet
36.Asian Koel
37.Greater Coucal
38.Pied Crested Cuckoo
39.Rose-Ringed Parakeet
40.Little Brown Dove
41.Spotted Dove
42.Blue Rock Pigeon
43.Wood Sanpiper
44.Red-Wattled Lapwing
45.Black Winged Stilt
46.Common Coot
47.Purple Moorhen
48.Indian Peafowl
49.Grey Francolin
50.Shikra
51.Black Kite
52.Black Shouldered Kite
53.Brahminy Kite
54.Spot-Billied duck
55.Oriental White IBIS
56.Eurasian Spoon Bill
57.Painted Stork
58.Indian Pond Heron
59.Cattle Egret
60.Little Egret
61.Median Egret
62.Grey Heron
63.Purple Heron
64.Spot-Billied Pelican
65.Large Egret
66.Snake Bird/Darter
67.Little Cormorant
68.Little Grebe

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~

சிறுதுளியில் பள்ளி சிட்டுக்களுடன்







copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
சிறுதுளியில் பள்ளி சிட்டுக்களுடன் நொய்யல் அன்னையையும் , அன்னையின் அருள் வடிவான குளங்களையும் பற்றி சிறிது உரையாற்ற வாய்ப்பு கிடைத்தது !

தெரியலையே ,புரியலையே !!!

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மழை தரும் மேகங்கள் போன இடம் தெரியலையே ,புரியலையே !!!
மனதினுள் மழை துளிகளில் நினைந்தது போல கனவு இன்று >>>
பாலை வனத்தில் நீச்சல் பயில முடியாது ,இனி
தமிழகத்தில் விவசாயம் செய்ய முடியாது !!!
நீரில்லாமல் ஏதும் இல்லை ,
நம்புவோம் தினமும்
"புது விடியல் இல்லாத உலகம் இல்லை "
-மழை பெய்து கொங்கு நாடு செழிக்க !
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்
~எம்மை இயங்க வைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையே -உன்னை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்
-பசுமை துளிகள்
~உமேஷ் மருதாசலம்~

ஆறாம் அறிவின் ஆற்றல் மூலம் மனிதன் இயற்கையை சிதைத்து ,
வளர்ச்சிபெற கற்றுக் கொண்டான் !!!
#இயற்கையை சிதைக்காமல் நமக்கு கிடைக்கும் வளர்ச்சிதான் நிலையான பாரதத்தை உருவாக்கும் !!!
~நாளைய பாரதம் நல்ல ஆராய்ச்சியாளர் கையில் இருக்க வேண்டும்~
-பாரத விரும்பி
உமேஷ் மருதாசலம்

மலைவாழ் மழலைகளுடன் ஒரு நாள் (26-01-2013)

பறவைகள் கூட !!!

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
பறவைகள் கூட மரத்தில் இருந்து
உதிர்ந்து விழுந்த குச்சிகளைத் தான்
கூடு கட்ட தேர்வு செய்கின்றன !
#ஆனால் மனிதன் மரங்களை வெட்டி
வீடு அமைக்கின்றான் ,
சாலை அமைக்கிறான் ,
கட்டில் அமைக்கிறான் ,
$ என்று மரங்களை மதித்து உணருவார்கள்
ஆறு அறிவு சுமக்கும் மனிதர்கள் ???
-இயற்கை இனியது
~உமேஷ் மருதாசலம்~

Thursday 7 February 2013

மரங்கள் இல்லாமல் நம் உடலுக்கு சுவாசம் இல்லை ! -தூய சுவாச வேண்டி

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மலர்கள் பூக்கும் மரங்களில் என்றும் வாசம் குறைவதில்லை ,
மலர்களின் வாசம் உணர நவீன கால மனிதர்களுக்கு மூக்குதான் இல்லை ,
மரங்கள் இலை அசைத்து நம்மை வா வா என அன்புடன் அழைத்தாலும் ,
ரம்பம் கொண்டு அறுக்கும் படையுடன் சென்று கொலை செய்கிறான் மனிதன் ,
மனிதர்களுக்கு சுவையான பழம் தந்து ருசி கொடுத்தாலும் -
மனிதன் மரங்களையும் லாபம் ஈட்டித் தருகிற கருவியாகதான் பார்க்கின்றான்
மரங்கள் இல்லாமல் நம் உடலுக்கு சுவாசம் இல்லை !
-தூய சுவாச வேண்டி
~உமேஷ் மருதாசலம்~

மழலைகளிடம் பிரியாவிடை சொல்லி நடு இரவில் கோவை திரும்பினேன் ,

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
காட்டு/வனச் சாலைகளில் என் பயணங்கள்
(01,02,03-02-2013)
இடம் : ஆனைமலை புலிகள் காப்பகம்
வெள்ளிக் கிழமை சிட்டுக்களுடன் சிறுதுளியில்
குளங்களின் பாதுகாப்பு பற்றி
கோவை பள்ளி மாணவர்களுடன் உரையாடல் ,
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு இரவில் பயணம் ,
காட்டு வழி பயணம் ,
மலையுச்சி செல்லும் வழி எங்கிலும் புலிகள் விரும்பி உண்ணும் -
நான்கு அடி மேல் உயர கடமான் கூட்டமாக நின்றது ,
... புதர் மறைவில் சரகுமான் ஒன்று சாலையோரம் எட்டிப்பார்த்தது ,
முயல்கள் வாகன வெளிச்சம் பட்ட உடன் செய்வதறியாது நின்றது ,
காட்டுப் பன்னிகள் பாறைப்போல உறங்கி இருக்க ,
அமைதியான இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் விரிந்திருக்க ,
கோதுமை ரவை உப்புமா நாவிற்கு ருசிகொடுக்க ,
தூக்கம் என்னை ஆட்கொள்ள ,
காட்டுக் கோழி விடியலை உணர்த்தியது ,
மலை வாழ் மழலைகள் வெந்நீர் அடுப்பருகில்
குளிர் காய ,
காட்டு எருமை ஒன்று எங்கள் சாலையில் குறுக்கிட்டது ,
சூரியன் மேலே வளரத் துவங்கியது ,
கோவை சாலையில் வாகனம் ஊர்ந்தது கீரனத்தம் நோக்கி ,
பிரபல மென் பொருள் நிறுவனம் ஒன்று அரசு பள்ளிகளுக்கான போட்டிகளை நடத்தியது ,
நாள் முழுவதும் மாணவர்களுடன் கழிந்தது ,
பொள்ளாச்சி நோக்கி நகர்ந்தது ,
எலிகள் குறுக்கே நகர ,
புனுகுப் பூனை ஒன்று தலை தூக்க ,
காட்டு மாடு ஒன்று புல் மொய்ந்தது ,
மீன் ஆந்தை ஒன்று பயம் தந்து பெரிதாய்ப் பறக்க ,
மழலைகளிடம் பிரியாவிடை சொல்லி நடு இரவில் கோவை திரும்பினேன் ,
உறங்க நினைக்கையில் கோவைக் குளங்களைப் பற்றி டைம்ஸ் நாளிதழில் என்னுடைய கருத்து வெளிவந்துள்ளதை படித்தேன் ,
செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடக நண்பருக்கு நன்றிகள் ,
ஞாயிறு விடியும் முன் நீர் பறவைகளைக் காண முத்தண்ணன் குளம்,
கிருஷ்ணாம்பதி குளம் ,
நஞ்ஜராயன் குளம் சென்றோம் ,
குளத்தின நிலைமைக்கு நாம்தான் காரணம் என அங்கு கூடி இருந்த மென்பொருள் நிறுவன ஊழியர்களிடம் உணரவைத்தேன் ,
"உயர் கல்வி நிலையம் "சென்று
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்தேன் ,
வீடு சென்று அம்மா செய்த பச்சைப் பயிர் உண்டேன் ,
பேருந்தில் வீடு திரும்பினேன் ,
குறிச்சிக்குளத்தில் பறவைகளைக் ரசித்தேன் ,
பின் உறங்கினேன் புதிய விடியலைக் காண !!!
களப் பணி விரும்பி
-உமேஷ் மருதாசலம்

டைம்ஸ் செய்தித்தாளில் கோவைக் குளங்களின் இன்றைய நிலை பற்றி (02-02-2012)

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
டைம்ஸ் செய்தித்தாளில் கோவைக் குளங்களின் இன்றைய நிலை பற்றி
(02-02-2012)

மாலை நேரப் பயணம் (30-01-2013)

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மாலை நேரப் பயணம் (30-01-2013)
மாலை சூரியன் பொன்னிறக் கதிர்களை குளத்தில் விரித்துக் நீரினை குடித்து தாகம் தீர்த்து !
பாம்புத்தாரா பறவை ஒன்று குளத்து நடுவில்
காய்ந்த மரத்தில் தன் சிறகுகளை விரித்து வெயிலில் காய்ந்தது ,
நாரைகள் கூட்டமாக உணவு தேடின ,
சின்ன ஜோடி மீன் கொத்தி ஒன்று உணவு தேடி குளக்கரைகளில் அலைந்தது ,
நீர் காகங்கள் அங்கும் - இங்கும் பறந்து மாலை பொழுதை ரசித்தன ,
வாத்துகளோ குளம் விட்டு குளம் ...பறந்து நீரில் குதித்து விளையாடின ,
இவைகளை கரையில் நின்று ரசித்த எனக்கோ
உக்கடம் பேருந்து நிலையத்தில் சுடச்சுட
"பாதாம் பால்" வாய் ருசிக்க ,
பழநி வரை ஆன்மீக நடைப்பயணம் சென்ற பக்தர்களுடன் திராட்சை பழம் ருசித்துக்கொண்டு சுந்தராபுரம் வரை 8-மைல் தூரம் என் வீடு நோக்கி நடந்து சென்றேன் !|
இது ஒரு பக்திப் பயணம் போல
-மாலை நேரப்பயண விரும்பி
~உமேஷ் மருதாசலம்

இலை விரித்து உணவு படைக்கும் வாழை இலைகள் இன்று வறட்சியில் காய்ந்து போய்விட்டன ,

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~

இலை விரித்து உணவு படைக்கும் வாழை இலைகள் இன்று வறட்சியில் காய்ந்து போய்விட்டன ,
விவசாயி என கூறப்படும் நம்மில் ஒருவருக்கு தான் தெரியும் இந்த வாழை- வாடிய வலி ,
இனி எப்படி அன்னதானம் , படையல் ,பூஜை முதலிய முந்திய நடைமுறைகள் நடைமுறையில் எப்படி நட...க்கும் ?
பல அறியவகை வாழைபழ வகைகள் அழிந்து விட்டன ,
தமிழர் விரும்பி உண்ணும் வாழைப்பழம் ஒன்றன் விலை 3-5 R.S ரூவாய் !!!
தலைவிரித்துச் பூச்சூடும் ,
தண்டை அணியும் ,
-வாழை விரும்பி
உமேஷ் மருதாசலம்
மேலும் பார்க்க

சுவடு தெரியாமல் அழியும் நீராதாரங்கள்: மண் மூடி மறைக்கும் மாநகராட்சி

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~


சுவடு தெரியாமல் அழியும் நீராதாரங்கள்: மண் மூடி மறைக்கும் மாநகராட்சி

கோவை:வறட்சியால் ஏற்கனவே காய்ந்து போயுள்ள கோவை குளங்கள், வளர்ச்சித் திட்டங்களின் பெயரில் சுவடு தெரியாமல் சிறிது, சிறிதாக அழிந்து வருகின்றன. உக்கடம், வாலாங்குளம், அம்மன்குளம் வரிசையில், குறிச்சி குளமும் அடுத்த இரையாகி வருகிறது.பருவமழை பொய்த்துப் போன காலங்களிலும், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வளம் கொழித்து வந்தது நொய்யல் ஆறு. இந்த ஆறுடன் தொடர்புப்படுத்தி, 173 கி.மீ., தூரத்தில் 32 குளங்கள் ஒன்றோடு இணைக்கும் ...விதத்தில் அமைக்கப்பட்டிருந்தன.இதில், கோவை நகர பகுதியில் முக்கியமாக ஒன்பது குளங்கள் இருந்தன. அவற்றில், அம்மன்குளம் இந்த இடமே தெரியாமல், குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியாக மாறியுள்ளது. எஞ்சியிருப்பவை, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தணம்குளம், செல்வ சிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளங்கள் மட்டுமே.இவற்றில் மாநகரின் வளர்ச்சித் திட்டங்களில், "பலி கடா'வாகி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் ஆகியவை பரப்பையும், வனப்பையும் இழந்தன. உக்கடம் பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன், மின் நிலையம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை போன்றவை, இந்த குளங்களுக்குள் அமைந்துள்ளன. இவை தவிர, புதிய ரோடுகள், ரயில்வே பாலங்கள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளால், இந்த இரண்டு குளங்களும் பொலிவை இழந்தன. நிலத்தையும், நீர்பரப்பையும் இழந்த இந்த இரண்டு குளங்களிலும் தண்ணீரும் பல காரணங்களால் கடுமையாக மாசுபட்டு வருகிறது.

கழிவுநீர், மருத்துவ கழிவு, டீசல் மற்றும் ஆயில் கழிவு என திடக்கழிவும், திரவக்கழிவுமாக இந்த குளங்கள் பாழடைந்து வருகின்றன.பொதுப்பணித்துறை கைவசம் இருந்த இந்த குளங்கள் 2009ம் ஆண்டு மாநகராட்சிக்கு கைமாறப்பட்டன. 90 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் ஆண்டுக்கு தலா ரூ. 100 வாடகைக்கு எட்டு குளங்களையும் மாநகராட்சி ஏற்றுக் கொண்டது. பொதுப்பணித் துறையிடம் இருந்து, மாநகராட்சி பொறுப்பில் குளங்கள் வந்தபோது, விடிவுகாலம் பிறக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது."ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தில்' நிதி இருந்தும், குளங்களை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி துவங்கவில்லை. மழையின்றி குளங்கள் வறண்டு வரும் நிலையில், நீர் ஆதாரங்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. "சிறுதுளி' உள்ளிட்ட அமைப்புகள் குளங்களை தூர் வார முன்வந்து, மாவட்ட நிர்வாகத்தை அணுகியும், அனுமதி கிடைக்கவில்லை.அதேநேரத்தில், குளங்களை காக்க வேண்டிய மாநகராட்சியோ, இருக்கும் குளங்களையும் சுவடு தெரியாமல் மண் மூடி புதைத்துவிடுவதில் குறியாகவே இருக்கிறது. இதற்கு உதாரணம், குறிச்சி குளம். கோவையின் தெற்கு பகுதிகளை வளம் கொழிக்க செய்த இந்த குளம், இன்று வறண்டு வருகிறது. இந்த குளத்தையொட்டி சாலையின் மறுபக்கத்தில் இருந்த சிறிய குளத்தை மூடும் பணியை மாநகராட்சி கச்சிதமாக செய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக, பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக, குளத்தின் பெரும்பாலான பகுதி மண் கொட்டப்பட்டு, மூடப்பட்டு வருகிறது. இங்கு பஸ் ஸ்டாண்ட் அமையும்போது அருகில் உள்ள பிரதான குளத்தின் பெரும் பகுதிகளும், பல்வேறு திட்டங்களுக்காக மூடப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

வழக்கு தொடர திட்டம்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், "கோவையில் உள்ள குளங்களை அழகுபடுத்தப் போகிறோம் என கூறி, பொதுப்பணித்துறையிடம் இருந்து குளங்களை மாநகராட்சி கைப்பற்றியது. எந்த குளங்களையும் அழகுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் குளங்களை, பாதுகாப்பாக பராமரித்தாலே போதுமானது. கோவை மாநகர் மற்றும் புறநகரில் உள்ள பல குளங்கள் இன்று கழிவுநீர் குட்டைகளாக மாறி வருகின்றன. குறிச்சி குளத்தின் ஒரு பகுதியை மூடி, பஸ் நிலையமாக மாற்றும் முயற்சி கண்டிக்கத்தக்கது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக, கோர்ட்டில் வழக்கு தொடர, நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=634947

தென்றல் காற்று இனிய மொழியால் எங்களை தாக்க ,

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
கிராமத்துச் சாலைகளில் என் பயணங்கள் (27-01-2013)
இடம் :மரப் பாலம்
(கோவை மாநகராட்சி-தெற்கு மண்டலம்)
சில் என பிறந்தது ஒரு காலைப் பொழுது ,
மாநகர கழிவு நீர் தாங்கிய குளத்தில் கிழக்கே
இனிய சூரிய உதயம் ,
பறவைகள் ஒவ்வொன்றாக கூடு விட்டு குளத்தினை நோக்கி அசைந்து வர ,
மீன்களின் சுதந்திர நீந்தல் தடையானது ,
அம்மம்மா! பறவைகளின் எண்ணிக்கை மிகவும் நீளமானது ,
கற்றுணர என்னுடன் வந்த பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு பிரம...்மாண்ட காட்சி ,
பௌர்ணமி நாளில் தர்மலிங்க மலை வனப்பகுதியில் கிரிவலம் சென்ற அன்பர்கள் தெரியாமல் வீசி எறிந்த பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்ய நானும் - ராகுல் என சூழல் ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவனும் 2(இரண்டு) கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை வனபகுதியில் இருந்து அப்புறம் படுத்தினோம் !
இனி வன விலங்குகள் நிம்மதியாக உணவு உண்ணும் ,
சிறு குழந்தைகள் குண்டு விளையாட ,
காடைப் பறவை அதிக எண்ணிக்கையில் எங்களைக் கண்டு ஓட ,
புதரில் மறைந்த குள்ள நரி ஒன்று எங்களைக் கண்டு முறைத்து ஓட ,
நாங்களும் வன பகுதியினை விட்டு மலைக்கோவிலுக்கு பயணமானோம் !
செங்குத்தலான மலைத்தொடர் அது ,
தர்மலிங்க ஆண்டவர் எங்களுக்கு சிறப்பு சம பந்தியில் அன்னதானம் படைத்து களப்பணி ஆற்றி களைத்துப் போன எங்களுக்கு பலம் ஊட்டினார் ,
தென்றல் காற்று இனிய மொழியால்
எங்களை தாக்க ,
சிவபுராணம் பாடி இறைவனைத் தொழுதோம் ,
நொடிப்பொழுதில் மலைத்தொடர் கீழ் இறங்கினோம் ,
பின் ஓசை சுற்றுச் சூழல் அமைப்பின் சூழல் சந்திப்பில் மனித-யானை மோதல் என்னும் விவாதத்தில் சங்கமித்தோம் ,
நிலவொளியில் VOC (வஉசி )மைதானத்தில் நண்பருடன் சின்ன உரையாடல் ,
முழு நிலவு படர்ந்த வானின் கீழ்
எறும்புகளைப் போல தைப்பூச நன் நாளில் சாரைச்சாரையாக அரோகரா கோசம் முழங்க ,
ஆயிரம் ஆயிரம் முருக பக்தர்கள் கோவை -பழநி நெடுஞ் சாலைகளில் முரசு கொட்டி மெல்லிய மயில் தோகை தாங்கிய காவடி சுமந்து நடனம் ஆடிச் செல்கின்றனர் கொங்கு நாட்டு கிராம மக்கள் !!!
சமத்துவம் பிறந்தது இந்த பக்திப்பயணத்தில்,
இவர்களுடன் நடைப் பயணம் செல்ல ஆசைதான் -
நவீன கால அவசர உலக கௌரவ படிப்பு வாய்ப்பு அளிக்கவில்லை (வருந்துகிறேன்),
என்று இவர்களுடன் சென்று இறைவனைக்காண்பேன் என்று ?
சமத்துவ பயண விரும்பி
-உமேஷ் மருதாசலம்
Bird Watching(26,27-01-2013)
1. Little Grebe
2. Little Cormorant
3. Snake Bird
4. Spot-Billed Pelican
5. Purple Heron
6. Grey Heron
7. Indian Pond Heron
8. Cattle Heron
9. Little Egret
10. Painted Stork
11. Oriental White IBIS
12. Spot-Billed Duck
13. Black Shouldered Kite
14. Black Kite
15. Brahminy Kite
16. Shikra
17. Black Eagle
18. Pallid Harrier
19. Grey Francolin
20. Grey Jungle Fowl
21. Indian Peafowl
22. White Breasted Waterhen
23. Purple Moorhen
24. Common Coot
25. Red-Wattled Lapwing
26. Common Sandpiper
27. Blue Rock Pigeon
28. Spotted Dove
29. Little Brown Dove
30. Rose-Ringed Parakeet
31. Malabar Parakeet
32. Pied Crested Cuckoo
33. Asian Koel
34. Malkoha
35. Greater Coucal
36. House Swift
37. White-Breasted Kingfisher
38. Chestnut-Headed Bee-Eater
39. Indian Roller
40. Common Hoopoe
41. Copper Smith Barbet
42. Crimson-Throated Barbet
43. Lesser Golden-Backed Woodpecker
44. White Cheeked Barbet
45. Lark
46. Eurasian Golden Oriole
47. Black Drongo
48. White-Bellied Drongo
49. Rosy Starling
50. Brahminy Starling
51. Common Myna
52. Jungle Myna
53. Indian Treepie
54. Common Crow
55. Jungle Crow
56. Common Iora
57. Red-Vented Bulbul
58. Red-Whiskered Bulbul
59. White Browed Bulbul
60. Babbler
61. Asian Paradise Flycatcher
62. Common Tailor Bird
63. Ashy Prinia
64. Magpie Robin
65. Indian Robin
66. Yellow Wagtail
67. Large Pied Wagtail
68. Purple-Rumped Sunbird
69. Small Sunbird
70. Lotens Sunbird
71. Purple Sunbird
72. House Sparrows

மலைவாழ் குழந்தைகள் பள்ளியில் "குடியரசு தின" நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் !

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
காட்டுச் சாலைகளில்-புலிக்காட்டில் என்
ஒருநாள் பயணம் (26-01-2013)
இன்று சூழல் நண்பர்களுடன் டாப்ஸ்லிப் -பகுதியில் உள்ள,
மலைவாழ் குழந்தைகள் பள்ளியில் "குடியரசு தின" நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் !
கம்பத்தில் ஏற்றப்பட்ட கொடியினை நோக்கி தேசிய கீதம் பாடினோம் ,
மழலை குழந்தைகள் கிராமிய பாடலுக்கு குழு நடனம் ஆட ,
மரங்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் நாடகம் நடித்தனர் ,
சிறப்பாக நடித்து , ஆடிய மாணவர்களுக்க...ு "திருக்குறள்" நூல் பரிசளித்தோம் !
அவர்களின் கல்வி மேன்பட தேவையான உதவிகளை கேட்டறிந்தோம் ,
மழையின்றி வாடியது ஆனைமலை புலிகள் காப்பகம் ,
பறவைகள் தலை காட்ட முன்வரவில்லை ,
சுற்றுலா பயணிகளுக்கு வெயிலில் ஏமாற்றம் தான் மிஞ்சியது !
பொள்ளாச்சியில் கால்வாய்களில் நீர் துளி கூடஇல்லை ,
தென்னை மரங்கள் வாடியது ,
பறவைகள் சோக கீதம் பாடியது ,
ஊழலுக்கு எதிராக செயல் படும் இந்திய அளவிலான ஒரு கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டேன் !
-ஊழலற்ற தேசம் வேண்டி
உமேஷ் மருதாசலம்

ஏழைகளுக்கு உதவுவோம் !

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
என் நாட்டு தமிழ் மக்களுக்கு அடுத்த வேலை ஆரோகியமான உணவு உண்ண வழி இல்லாத போது ,
வெறும் அலங்காரம் என்னும் பெயரில் பல வகையான அரியவகை பச்சைக் காய்கறிகளை அலங்கரிப்பது நியாயமா ?
சமீபத்தில் என் கல்லூரி தோழியின் அக்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பார்த்து மனது நொந்தது !!!
இது போல மனித நேயம் அற்ற செயல்களை தவிர்ப்போம் !!!
ஏழைகளுக்கு உதவுவோம் !
விவசாயத்தின் முக்கியத்துவத்தை பாரெங்கும் பரப்புவோம்

கண் துடைப்பு செயல்கள...ை செய்ய வேண்டாம் !

copyrights @ umeshmarudhu-2013

 ~Save Nature For Future~
வாலாங்குளம் பெரியளவிலான தொகை முதலீட்டில் சில நாட்கள் முன்பு ஆகாய தாமரை செடிகள் அரசால் அப்புறம் செய்யப்பட்டன !
மாநகரின் சுத்தீகரிக்கப்படாத கழிவு நீர் தேங்கி மீண்டும் செடிகள் குளத்தினை மூடி சூழ்ந்துள்ளது ,
கட்டிட கழிவுகள் கொட்டி குளத்தின் பரப்பளவு சுறுங்கி வருகிறது ,
ஆக்கிரமிப்புகளுக்கு அளவே இல்லை !!!
பல குளங்கள் இன்று குப்பை கிடங்கு போல காட்சி தருகிறது !
இனி அரசாங்கம் இது போன்ற கண் துடைப்பு செயல்கள...ை செய்ய வேண்டாம் !
1.ஒன்று கழிவு நீரினை தேக்காதே ,
2.இரண்டு குளத்தினை ஒட்டி சாலை அமைக்காதே !
~என்று தூய குளத்து நீரினை நான் காண்வேனோ,
அன்று என் சுவாசம் பெருமைக்கொள்ளும்~
தூய பூமியில் இந்த உடல் வாழ்ந்தது என்று !
தூய நீர் வேண்டி
-உமேஷ் மருதாசலம்

நீரற்ற வாழ்வு - உயிரற்றது

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
தீ பற்றி எறியும் மேற்கு தொடர்ச்சி மலை தொடர்கள் ,
யார் தீ பற்றி வைகின்றனரோ ?
வறட்சியின் பிடியில் கொங்கு மண்டலம் !
அரியவகை பாம்புகள் , வண்டுகள் , மலர்கள் , மரங்கள் , மூலிகைகள் !
ஏன் ? புலிகள் கூட சிக்கி மடிந்திருக்கலாம் ?
தீயில் கருகி மலர்களுக்கும் வாசம் மறந்துப்போனது !
மரங்கள் கருகிக் காய்ந்தன !
நீரற்ற வாழ்வு - உயிரற்றது
-மழை வேண்டி
உமேஷ் மருதாசலம்

நீரின்றி அமையாது உலகு நீர் வேண்டி-மழை வேண்டி

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மேற்கு தொடர்ச்சி மலையில் நீரினை மட்டுமே நம்பி வாழும் உயிரினங்களான
யானைகள் ,நீர் நாய்கள் , முதலைகள் , நீர்ப்பறவைகள் ,தாவரங்கள் , பறவைகள் ,
மாமிச உண்ணிகள் மற்றும் பூச்சிகளுக்கு இந்த கொடிய வறண்ட காலத்தில் நீர் சொட்டு கூட இல்லை !
இவை யாவும் அழிந்து வரும் வகையினை சேர்ந்தவை ,
இவற்றில் ஒன்று அழிந்தால் கூட காட்டின் ஒட்டு மொத்த உணவுச் சங்கிலி பாதிப்படையும் ,
பாதிப்படைந்தால் உணவின்றி பிற உயிரினங்கள் வாடி மடிந்து போகும் !
இவையின்றி மனிதனால் உயிர் வாழ இயலாது ,
நீரின்றி அமையாது உலகு
நீர் வேண்டி-மழை வேண்டி
-உமேஷ் மருதாசலம்

வறண்ட பூமியில் யானை உணவு தேடி ஊர்வலம் வந்தது

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
வாடிய மலர்களை தாங்கிய கொடியினைப் போல ,
நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் உயிர் தியாகம் செய்யப்போகும் சாலையோர
நிழல் தரும் ஆலமரம் ,
காற்று வீசும் அரசமரம் ,
பறவைகளைக் கவரும் புளியமரம் ,
மாசுநீக்கி வேப்பமரம்,
இவையாவும் வெட்டப்பட்டால் ?
வாழ தகுதியில்லா ஊராக மாறும்
கோவை - சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ஒர கிராமங்கள் !
என் மனம் வருந்துவதை கண்ட ,
... சூரியன் தலை குனிந்து மேற்கில் மலையிடுக்கில் மறைந்தான் ,
பச்சைக்கிளிகள் பனைமரப் பொந்தில் உள்ள கூட்டினை தேடி அமைதி அடைந்தன !
எங்கும் இருள் சூழ்ந்தது - இரவு பிறந்தது !
வறண்ட பூமியில் யானை உணவு தேடி ஊர்வலம் வந்தது
~மரம் இறைவன் தந்த சுவையான வரம்~
இயற்கை விரும்பி
-உமேஷ் மருதாசலம்

பவானி அணையில் பறவைகளுடன் பயணம் :
Bird Watching @ Erode Bhavanisagar Dam(21-01-2013)
1.Little Cormorant
2.Little Grebe
3.Darter
4.Little Egret
5.Cattle Egret
6.Common Sandpiper
7.Indian Roller
8.Indian Peafowl
9.Indian Pond Heron
10.Black Kite
11.Brahminy Kite
12.Black Shouldered Kite
13.Shikra
14.Grey Francolin
15.Red Wattled Lapwing
16.Blue Rock Pigeon
17.Spotted Dove
18.Little Brown dove
19.Rose Ringed Parakeet
20.Asian Koel
21.Greater Coucal
22.House Swift
23.White-Breasted Kingfisher
24.Chestnut-Headed Bee-Eater
25.Common Hoopoe
26.Copper smith Barbet(Call)
27.Brown Shrike
28.Black Drongo
29.White-Bellied Drongo
30.Rosy Straling
31.Brahminy Starling
32.Common Myna
33.Indian Treepie(Call)
34.Common Crow
35.White Browed Bulbul
36.Babblers
37.Common Tailor Bird
38.Indian Robin
39.Grey Wagtail
40.Large Pied Wagtail
41.Purple-Rumped Sunbird
42.Loten's Sunbird
43.Purple Sunbird
44.House Sparrow

பாவமான பாலை வனமாக காட்சி தந்தது ,

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
என் அலுவலக அதிகாரி நீண்ட போராட்டத்தின் பின் எனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க ,
சத்தியமங்கலம் இருக்கும் திசை நோக்கி நகர்ந்தேன் ,
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற
தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு மற்றும் திட்டம் வடிவமைப்பு போட்டியில் நடுவராக சென்றேன் ,
நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் போட்டியில் தங்கள் தனித் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர் ,
இவர்களில் ...யார் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர் என மதிப்பிடும் பணி சற்று சவாலாகத்தான் எனக்கு இருந்தது ,
மலைவாசிகள் வாழும் கூரை குடிசை வீடுகள் ,
தினமும் வாழ்கையில் பயன்படுத்தும் கருவிகள் என ஆதிவாசி பயன் படுத்திய பழங்கால பொருட்கள் இடம் பெற்றுந்தன ,
அந்த கல்லூரி மாணவர்கள் என்னை சூழ்ந்து பல வினாக்களை எழுப்பினர் ,
அதில் நரேஷ் (Naresh)மாணவன் என்னை யானைகளை காண அழைத்து சென்றான் ,
அழகிய பறவைகள் விளையாடும் கிராமத்துச் சாலையில் பயணம் அது !
அன்று பவானி ஆற்றில் நீர் ஓடிய தடயம் கூட இன்றுயில்லை ,
கூட்டமாக காட்டு எருதுகள் ,யானைகள் அருந்த அணையில் கொஞ்சம் கூட நீரில்லை ,
பாவமான பாலை வனமாக காட்சி தந்தது ,
மாணவனுடன் மாலை சிறு உணவை உண்டபின் ,
கோவை திரும்பியது என் பயணங்கள் !
என்னை உபசரித்து நல்ல முறையில் கவனித்த நண்பர்களுக்கு நன்றிகள் .
~உமேஷ் மருதாசலம் ~

மக்களிடம் செய்தி சேர்த்து

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
பாலமலை தூய்மை பணி செய்தித்தாளில் (21-01-2013)
செய்திதாளில் வெளியிட்டு
மக்களிடம் செய்தி சேர்த்து ,
எங்களை மேலும் களப்பணியில் ஊக்கம் படுத்திய ஊடக நண்பர்களுக்கு நன்றிகள் !

கோவை விமான நிலையம் சென்ற என் பாதங்கள்

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
நகரப்பேருந்துதில் கோவை விமான நிலையம் சென்ற என் பாதங்கள் ,
குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் பட்டம் விடும் திருவிழாவில் அடிபட்டு இறந்து போன பல அறியவகை பறவைகளின் உடலில் உள்ள அபாயகரமான ரசாயன ,அளவுகளை அளவிட ஆராய்ச்சி நிலையத்திற்கு கோவை வந்தது ,
இறந்து போன பறவைகளை எங்கள் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு சென்றேன் சேர்த்தேன் ,
பின் பறவைகளை காண மலை பகுதியில் நடைபயணம் சென்றேன் ,
அது ஒரு மலை கிராமம் பேருந...்து வசதி இல்லை பிற போக்குவரத்து வசதி இல்லை,
களைப்பில் தொண்டை ஏங்க ஜீப் ஒன்று மலைவாழ் மக்களை சுமந்து நிறைந்து வந்தது ,
ஜீப்பின் மேலே அமர்ந்து ஆகாய கூரையில் நகரம் சென்றேன் !
காந்திபுரம் சென்ற என் பேருந்து -
சூலூர் குளம் ,பள்ளபாளையம் குளம் ,உக்கடம்-பெரியகுளம் ,குறிச்சி குளம் என குளக்கரையில் பறவைகளை தரிசித்தேன் !
மாலை வீடு சென்றதும் கருங்குயில் கூவி வானம் இருள போவதை கூறியது !
இரவு பிறந்தது
~இரவு விரும்பி~
உமேஷ் மருதாசலம்

காண்பது குளமா இல்லை பாலைவனமா ?

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
கோவையில் நாம்இன்று காண்பது குளமா இல்லை பாலைவனமா ?
நீர் இல்லை , நீர் நின்ற தடயங்களும் இல்லை ,
குப்பைகளும் , கட்டிட கழிவுகள் மட்டுமே நிறைந்த குளத்தில் ,
நாற்றம் தாங்க முடியவில்லை ,
வெறிபிடித்த நாய்களோ குளம் முழுவதும் சூழ்ந்து இருக்க ,
நீர் பறவைகள் வாழ இடம் இல்லை ,
ஆக்கிரமிப்புகள் குளக்கரையில் தலைத்தூக்க ,
குளத்து மரங்கள் எல்லாம் ஏழைகள் விறகுக்காக ஒவ்வொன்றாய் வெட்ட ,
பறவைகள் கூடு கட்டி வாழ மரம் இல்லை... ,
அன்று சோலைவன நீர் தேக்கிய கோவை குளங்கள் ,
இன்று கோவை மாநகரின் கழிவு நீரினை சுமக்கின்றன ,
மீன்களோ நீந்தி விளையாட நீர் இல்லை ,
மீன் பிடிக்கும் மீனவனக்கோ நீரில்லை ,
என்று மக்கள் இந்த வலிகளை உணர்வரோ ?
அன்று தான் இந்த நரக நிலை மாறும்
மழை வேண்டி
-உமேஷ் மருதாசலம்

பாலமலை தூய்மை பணி(19-01-2013)

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
பாலமலை தூய்மை பணி(19-01-2013) (6 புகைப்படங்கள்)கிராமத்துச் சாலைகளில் என் பயணங்கள்(19-01-2013)
இடம்: பாலமலை கோயில்
விடியலில் குளத்தில் செங்கால் நாரை ஒன்று உணவுதேட , சரவணம்பட்டியில் சூழல் அக்கறை அணி ஒன்றுதிரள ,
கரிச்சான் குருவிகள் எங்களின் சங்கமத்தை நோட்டம் போட்டன , பின்னர் பயணம் பாலமலை அ...ரங்கநாதர் கோயில் நோக்கி செல்ல , மாங்குயில் ஒன்று எங்களை வரவேற்றது ,
அரங்கநாதர் குடிக்கொண்டுள்ள மலையினை அசுத்தம் செய்ய மனம் வந்தது எப்படியோ ? நீரோடிய பாறைகள் எல்லாம் குப்பைகள் குடிபுகுந்து விட்டன
போதை மது அருந்தும் "மூடர்களோ" யானை செல்லும் பாதையில் மது குவளையை உடைத்து வீசினர் ,
ஆண்டவனை தரிசித்த பிளாஸ்டிக் பைகள் மண்ணில் எறியப்பட்டன தேனீர் தேக்கும் குவளைகள் காடெங்கும் குவிந்தன ,
சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்ட நண்பர்களோ அணிதிரண்டு கண்ணாடி குவளைகள் ,
பிளாஸ்டிக் குப்பைகளை 70 பைகளில் அப்புறபடுத்தி ,
முறையாக மறுசுழற்சி செய்ய அனுப்பினோம் !
களைப்பில் வாடிய எங்களை ரங்கநாதர் சமபந்தி அன்னதானம் அளித்தார் காட்டினை சுத்தம் செய்யும் அறப்பணியில் என்னையும் அழைத்து ,
விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்பு தந்து & களப்பணி ஆற்ற வாய்ப்புத் தந்த பிரபல மென்பொருள் நிறுவன தோழர்களுக்கு இயற்கை அன்னை என்றும் அருள்புரிவாள் !
வானில் வட்டமிட்ட சூரியன் மேற்கில் மறைந்தான்
காட்டின் சுகாதாரம் - நாட்டின் சுகாதாரம்
~உமேஷ் மருதாசலம்~
Bird Watching @ Palamalai Tribal Village(19-01-2013)
1. House Sparrow
2. Purple Sunbird
3. Large Pied Wagtail
4. Yellow Wagtail
5. Indian Robin
6. Pied Bushchat
7. Oriental Magpie Robin
8. Common Tailor Bird
9. Asian paradise-Flycatcher
10. Babblers
11. White-Browed Bulbul
12. Red-Whiskered Bulbul
13. Red-Vented Bulbul
14. House Crow
15. Jungle Crow
16. Indian Treepie
17. Common Hill Myna
18. Common Myna
19. Black Drongo
20. White-Bellied Drongo
21. Eurasian Golden Oriole
22. White Cheeked Barbet
23. Crimson-Throated Barbet
24. Copper Smith Barbet
25. Common Hoopoe
26. Indian Roller
27. Chestnut-Headed Bee-Eater
28. White-Breasted Kingfisher
29. Asian Koel
30. Greater Coucal
31. Rose-Ringed Parakeet
32. Blue Rock Pigeon
33. Spotted Dove
34. Little Brown Dove
35. Indian Peafowl
36. Red-Wattled Lapwing(Kurichi)
37. Common Sandpiper(Kurichi)
38. Purple Moorhen(Kurichi)
39. Black Kite(Kurichi)
40. Painted Stork(Kurichi)
41. Indian Pond Heron(Kurichi)
42. Cattle Egret(Kurichi)
43. Purple Heron(Kurichi)
44. Grey Heron(Kurichi)
45. Little Cormorant(Kurichi)
மேலும் பார்க்க

Wednesday 6 February 2013

நான் நட்டு மரமான மரத்தில்

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
நான் நட்டு மரமான மரத்தில் பறவைகள்
நிழல் தேடி அமர்ந்து இருப்பதை ,
காணும் போது யாகசகர்களுக்கு நிழல்கூடம் கட்டியதை போல உணர்கிறேன் !
சிறு குழந்தைகள் அதில் மலர் பறிக்கும் போது இறைவனை அலங்கரிக்கப்போவதை உணர்கிறேன் !
செம்பூத்து பறவை ஊரில் இருக்கும் பறவைகளுக்கு உரக்கச் சொல்கிறது
இந்த மரம் பாதுகாப்பானது என்று !
மரம் நடுவது ஒரு விழா அல்ல - நாம் எல்லோரும் உணரவேண்டிய ஒரு உணர்வு
மரம் நடுவோம் , ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்
மரம் விரும்பி
~உமேஷ் மருதாசலம்~

ஆகாய விரும்பி

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மாலை குளிர்ச்சியான என் வீட்டு மொட்டை மாடியில்,
வானில் பிறை நிலா என்னை கனவுலோகம் அழைத்துச் சென்றது !
அதில் நட்சத்திரங்கள் பாடின,
சூரியன் வெப்பத்தில் தாண்டவம் ஆடினான் ,
மேகங்கள் என்னைத் தொட்டு போயின ,
காற்று என் உடலை முத்தமிட்டன ,
என் கண்கள் விழித்தன என் மேல் நின்ற நிலா என்னை பார்க்கிறது என்று ,
வெட்கமுடன் மீண்டும் கண்களை மூடினேன் !
# நாளை காலையில் புதிய விடியலைக் காண
ஆகாய விரும்பி
-உமேஷ் மருதாசலம்

இன்றைய விடியல் புதியது

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மாங்குயில் ஒன்று இன்று காலை என் வீட்டு மாமரத்தில் நின்று கூவியது ,
வால்காக்கை என நினைத்தேன் !!!
அதன் உடல் தங்கநிறத்தில் பொன்மேனி மின்னியது ,
வாழைப்பூவில் தேன் எடுக்க பூச்சிட்டு / தேன் சிட்டு வந்தது !
வாலாட்டிக் குருவி இரண்டு நீண்ட நேரம் கத்தியது ,
இன்று பறவைகள் இனிய விடியலை உணர்த்தியது என் ஜென்னல் அருகில்
இன்றைய விடியல் புதியது
மரம் விரும்பி
~உமேஷ் மருதாசலம்~

சூரியன் மறைந்த இடம்

copyrights @ umeshmarudhu-2013
~Save Nature For Future~
மாசடைந்த நீரைப்பார்த்து சூரியன் சொன்னது , என்று உனக்கு பாவம் சுமக்கும் நோய் குணமாகும் என்று ?

சூரியன் மறைந்த இடம் : குறிச்சி குளம்