Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Monday 31 December 2012

அரண்மனைகிளிகள்

copyrights @ umeshmarudhu-2012
 ~Save Nature For Future~
வறட்சியால் மனிதனுக்கும் தென்னைமரங்களுக்கும் மோதல் ஏற்பட்டுதென்னை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டவிவசாய ("ரியல் எஸ்டேட்") பூமி அது ,
தென்னை மரத்தின் சுவையான இளநீர் 25 ரூபாய் ,
ஐயோ , பருத்தி விளையும் பூமி எல்லாம் இன்று கட்டிடங்கள் முளைகின்றன ,
இவையாவும் சீரடைய , என்ன முடிவு செய்யப்போகிறாள் சூலக்கல் மாரியம்மன் அவள் ?
வடக்கிபாளையம் என ஒரு கிராமம் வறண்ட பாலைவனம் என கூறலாம் ,
சாலை எங்கிலும் படர்ந்து பசுமை புளியமரங்கள் ஆட,
புரவியபாளையம் அரண்மனை கோபுரங்களில் பாடல் இசைத்த பச்சை அரண்மனைகிளிகள் ,
யாவரும் வந்து அமர எல்லா வீடுகளிலும் திண்ணைகள் ,
ராஜாங்கம் செய்த ஜமீன்தார் வம்சம் ,
வாழையிலை விரித்த தோட்டங்கள் ,
கொய்யா தோட்டத்தில் திருடிய பழங்கள் ,
கடகடவென 100ல் காந்திபுரம் பறக்கும் என் பேருந்து ,
மாலையில் பாவ டெல்லி பெண்மணிக்கு சாலையில் சிறிதுநேரம் ஒலி / ஒளி (கண்ணீர்)அஞ்சலி ,
திரு.சண்முகசுந்தரம் ஐயா அவர்களின் "மருத்துவர் பார்வையில் யானைகள்" விவாதம் மெய் மறந்து அனுபவங்களை பகிர்ந்தார்...
பின் பேருந்து ஜாக்கிசான் படம் காண இரவு காட்சிக்காக போத்தனூர் அரசன் திரையரங்கம் நோக்கி நகர்ந்தது !!!
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (30-12-2012)

Friday 28 December 2012

இயற்கை அன்னைக்கு நன்றி ,

copyrights @ umeshmarudhu-2012
 ~Save Nature For Future~


ஆலமரம் ,அரசமரம் ,வேப்பமரம் ,புளியமரம்
காட்டை விட்டு நகரம் போறேன் கேட்டுக்கோ !!!
காட்டில் ஆரோகியமான, சுத்தமான சுவாசம் ,
நிழல் தந்த மரங்களுக்கு நன்றி !
என் செவிகளுக்கு இசை விருந்து அமைத்த பறவைகளுக்கு நன்றி ,
சுவையான நீர் தந்த ஓடைகளுக்கு நன்றி ,
ருசியான உணவு சமைத்த அண்ணனுக்கு நன்றி ,
நான் இன்னல் இன்றி உறங்க பனியில் காவல்காத்த பாதுகாவலர்களுக்கு நன்றி,
இயற்கை பற்றி தான் கற்றுணர்ந்த அனுபவ பாடங்களை எமக்கு போதித்த நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகள்,
விலங்குகள் , யானைகள் அருகில் இரவில் வாழ வாய்ப்பு தந்த விடுதிக்கு நன்றி ,
சுவையான மொழி பேசிய மலை மக்களுக்கு நன்றி ,
காட்டில் நடந்து செல்ல பாதை அமைத்த
யானைகளுக்கு நன்றி ,
உயரத்தில் என்னை தாங்கிய மலை சிகரங்களுக்கு நன்றி !
கோவை செல்ல வழி தந்த சாலைகளுக்கு நன்றி ,
பசுமை மாற உள்ளம் படைத்த என்றும் இளமை உருவமான இயற்கை அன்னைக்கு நன்றி ,
என்றும் உன்னை மறவா
இயற்கை விரும்பி
~உமேஷ் மருதாசலம்~
https://www.facebook.com/photo.php?fbid=516259795062377&l=a13503c223

நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன் ...
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே
ஒரு கனவு காற்றில் மிதக்குதே
அது மிதந்துக் கொண்டே சிரிக்குதே

ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய

நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்

நான் வருவேன்
மீண்டும் வருவேன்

ஓஹ வீரா 

சுத்தமான காற்று & ஆரோக்கியமான உணவு / வாழ்வு என்பது நமது பிறப்புரிமை

copyrights @ umeshmarudhu-2012 ~Save Nature For Future~

மரபணு மாற்று பயிர் வகைகள் , காய்கறிகள் அவற்றினால் ஏற்படும் பயன் மற்றும் தீங்குகள் தொடர்பாக இந்திய பெண் விஞ்ஞானி
ஒருவர் எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்புரை ஆற்றினார் !
இயற்கை நடைமுறைக்கு மீறிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது 
மனிதர்களை , பறவைகளை ,மரங்களை ,விலங்குகளை நேரடியாகவோ அல்லது 
மறைமுகமாகவோ சிக்கல் உண்டாக்கும். எனவே,
இயற்கை உணவு முறைகளை பின்பற்றுவோம் என உறுதியாக இருப்போம் !
சுத்தமான காற்று & ஆரோக்கியமான உணவு / வாழ்வு என்பது நமது பிறப்புரிமை 
இயற்கை இனியது
பசுமை விரும்பி
~உமேஷ் மருதாசலம்~

Thursday 27 December 2012

நொய்யல் நதிக்கரையின் ஓரம் ஒரு நாள் பயணம் ...!

copyrights @ umeshmarudhu-2012
 ~Save Nature For Future~

நொய்யல் நதிக்கரையின் ஓரம் ஒரு நாள் பயணம் ...!
பள்ளாபாளையம் குளம் , பட்டணம்புதூர் ,சிங்காநல்லூர் குளம் ,வெள்ளலூர் குளம் !!!
நீர்க்காகங்கள் அடங்கிய நீர் பறவைகள் அணிவகுத்து பறந்தன ,
பொதுப்பணித்துறை அதிகாரிகள் ,
ஆளும் அரசியல் கட்சி தொண்டர்களும்
குளத்தினை மூடி,குளத்தின் கரையில்
16-20அடி தார்சாலை அமைக்க களஆய்வில் இருந்தனர் !
சாலை அமைத்து இரு ஊர்கள் இணைக்கப்பட்டாலும் குளத்தினை மூடிய சாலை அவசியம்தானா ???

மிகவும் ஆபாயகழிவுகள் குளத்தில் கொட்டி எரிக்கப்பட <
பறவைகள் எங்கேதான் போகும் ?

வீட்டுக்கு ஒரு சிட்டுக்குருவி தென்பட்டது  பட்டணம் கிராமத்தில் !!!
சாலைகள் எங்கிலும் தகைவிலான் குருவிகள் சாகசம் செய்து என் அருகில் பறக்க !

வறட்சி வெடித்தாலும் மாநகரின் கழிவு நீரினால் நிரம்பி வழிந்தது சிங்காநல்லூர் குளம் !!!

மாநகரின் கழிவுநீர் தாங்கிய வெள்ளலூர் கிராமம் முழுவதும் சாக்கடை நாற்றம் வீசியது ,,,
ஒரு கிராமமே சாக்கடை நீரினால் அவதிப்படுகிறது ???
கொசுக்கள் நீரில் ஓய்வு எடுத்தன , மாலையில் மனிதர்களுடன் கடித்து விளையாட !

கரிச்சான் குருவிகள் நீரற்ற வெள்ளலூர் குளத்தில் பூச்சிகளை பிடித்து உண்ண ...///
சோளப்பட்சிகள் கூட்டமாக குளத்து மரங்களில் குடி இருக்க,
மயில்தொகைகள் குளம் முழுதும் சிதறி இருக்க,
நானோ
சிறகுகளை பொறுக்கி எடுக்க,

சோழமன்னன் கட்டிய தேனீஸ்வரர் கோவிலில் தேனிக்கள் குடியிருக்க ,
நொய்யல் நதியின் கரையில் சோழ மன்னன் கட்டிய ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலின் துளசி தீர்த்தம் !

விறகுக்காக பறவைகள் கூடுகட்டி வாழும் மரத்தினை வெட்டும் ஏழை மக்களை கண்டித்தேன் !!!
கொஞ்சம் சிந்தித்தேன் - இவர்களின் வறுமை நிலைமை என் கண்களை குத்தியது ...!
இரவில் பேருந்தோ என்னை சுமந்து ஆனைகட்டி நோக்கி பயணித்தது !!!
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (26-12-2012)


Tuesday 25 December 2012

மழைப்பொழிவு எங்கள் கொங்குநாட்டில் இல்லை ,

copyrights @ umeshmarudhu-2012
 ~Save Nature For Future~


மழைப்பொழிவு எங்கள் கொங்குநாட்டில் இல்லை ,
நொய்யல் என்னும் நதியில் வெள்ளை நீர் ஓடவில்லை ,
இன்று ஓடும் கருப்புநிற சாக்கடை நீர்
அருகில் நிற்க முடியவில்லை ,
ஊர் மேயும் ஆடு , மாடுகளுக்கு தாகம் தீர்க்க
தூய நீரில்லை,
வறட்சியில் வெடித்த குளத்து மண்ணில் ஒரு
புல்கூட முளைக்கவில்லை ,
மண்புளுக்களுக்கு வேலை இல்லை , அவைகளை உண்ணும் நீர் கொக்குகளுக்கு உணவில்லை ,
ஒதுங்க கூட நிழல் கூரை இல்லாத வழிப்போக்கர்களுக்கு
நீர் அருந்தவோ , குளிக்கவோ இங்கு ஒரு நதியில்லை,
விவசாயம் செய்பவர்கள் இருப்பினும் ,
வறட்சியில் தற்கொலை மட்டுமே பரிசாக கிடைத்தது ,
தானம்-தவம் இரண்டும் மழைப்பொழிவு இல்லாத கோவை மாவட்டத்தில் இல்லை !!!
-நொய்யல் ஒப்பாரி பாடி
~உமேஷ் மருதாசலம்~
இடம் :குறிச்சி குளம் (தெற்கு-கோயம்புத்தூர் மாநகராட்சி)


Monday 24 December 2012

Coimbatore Bird Race-2012 பறவைகளை நோக்கிய என் பயணம்(23-12-2012)

copyrights @ umeshmarudhu-2012
 ~Save Nature For Future~

Coimbatore Bird Race-2012
பறவைகளை நோக்கிய என் பயணம்(23-12-2012)
கோவை மாவட்ட பறவைகளை காணும் போட்டியில் பங்குபெற்ற நான்,
காலையில் சூரிய உதையத்தில்
குறிச்சி குளத்தில் துவங்கி ,உக்கடம் பெரியகுளம் ,வாலாங்குளம் ஆகிய
பகுதிகளை நடந்தே கடந்து சென்று நீர் பறவைகள் , ஊர்பறவைகள் -கூவும் குயில்
என நகரத்து பறவைகளை கண்டோம் !
பின்பு அரசுப்பேருந்தில் நாங்கள் காந்திபுரம் முதல் மூங்கில்பள்ளம் வரை
ஜென்னல் ஓரத்தில் இருவது(20)யானைகள் , ஊர் பறவைகள் கண்டு ரசித்தோம்,
வன பகுதிக்கு உட்பட்ட மலை கிராமத்தில் ஆலமரத்து அடியில் அமர்ந்து
பழம் உண்ணும் கிளிகள் , மலைக்காட்டு மைனாக்கள் என பழம் உண்ணிகளை கணக்கிட்டோம்,
வான் உயர்ந்த தென்னை தோப்பு உள்ளே சென்று கொண்டை குருவிகளை ரசித்தோம்,
அருகில் சப்தம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த காட்டாறு நீர் பள்ளத்தில்
ஆசிய வசந்த ஈப்பிடிப்பான்கள் , பூமர் ஆந்தை என எங்களை கலைப்பாற்றின
தடுப்பணையில் நீர் அருந்திய கடமான் , புள்ளிமான் , முயல் என எங்கள் பயணத்தை உற்சாகம் ஊட்டியது
புதர் மறைவில் பல மணிநேரம் அமர்ந்த நாங்கள்
கொண்டு சென்ற காகிதம் தீரும் வரை பல அழகிய பறவைகளை எங்கள் கண்களுக்கு விருந்து படைத்தது !!!
மலை கிராமத்து பேருந்து வளைந்து-வளைந்து எங்களை கோவை அழைத்துச்சென்றது ...!
நாங்கள் கணக்கிட்ட பறவைகளை போட்டி நடுவரிடம் சமர்ப்பித்து கலைபாறினோம் ,
அனைத்து அணிகளும் ஒன்று கூட விழா அரங்கம் நிறைந்து,
பறவைகள் குடும்பமாக ஒன்று கூடியதை போல இருந்தது !!!
பறவைகள் எண்ணிக்கை நூற்றிபத்தினை (110) தாண்டியது !
பறவைகளின் சங்கமம் - கூட்டு உணவுடன்
கூட்டினை நோக்கி பறந்தது !!!
இயற்கை விரும்பி ,
உமேஷ் மருதாசலம்
 

Long Updates-2012

copyrights @ umeshmarudhu-2012
 ~Save Nature For Future~

ஆதிவாசி / மலைவாசி மக்களின் தமிழ் மொழி தேன் சுவையுடன் ஒப்பிடும் சுத்தமான தமிழ் மொழி !

பறவைகள் கூடுகட்டி வாழ்கின்ற வீடு , 
இவர்களின் வீடு நிலையான , என்றும் வாழ சிறந்தது !

ஆதிவாசி / மலைவாசி பெண்கள் அடர்ந்த வன பகுதியில் உள்ள தங்கள் வீட்டில் கூட்டமாக விரும்பி பார்ப்பது சன் டிவி நாடகம் தான் !

மலைவாசி பெண்களின் பெயர்கள் அழைக்க சுவையாக இருக்கிறது !

- கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் ( 02 -11 -2012 )
இடம் : ஆனைகட்டி வன பகுதி -தமிழ்நாடு

ஒரு புதிய அனுபவம் உதயம் செய்தது , 
இந்த பனி விழும் இரவிலும் என்னை குளிரிந்து , மெய்சிளிர வைத்தது ... !
பறவைகள் சொர்க்க பூமியில் இரவில் பறவைகள் கூட மௌன விரதம்தான் !!!
அமைதியான இரவு

வயதில் பெரிய ஆந்தை ஒன்று என் ஜன்னல் அருகில் உள்ள மர கிளையில் நின்று அலறிக்கொண்டு , எட்டி எட்டி பார்த்தது !
ஆந்தையின் கண்கள் பார்க்க சற்று பயமாகத்தான் உள்ளது !
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் :
இன்றைய பயணம் மேற்கு தொடர்ச்சி மலை -கோயம்புத்தூர் குளங்கள்
நாள் : 31-10-2012 – 04-11-2012
புள்ளிமான்கள் துள்ளி விளையாடும் என் ஆராய்ச்சி நிலைய வாசலில்,
காட்டு பன்னிகள் ஓடி விளையாடும் புதர்கள் ,
நீண்ட தந்தம் கொண்ட காட்டு யானைகளின் கூட்டமான கம்பீர நடமாட்டம்,
புயல் காற்றில் , அசையாத மலை,
பறவைகளின் சங்கீத மழை,
மலைவாசி / ஆதிவாசி மக்களின் பசுமை மாறாத சுத்தமான மொழி ...
அமைதியான சாலைகள்
Bird Watching @ Western Ghats & Coimbatore Wetland’s (31-10-2012 – 04-11-2012)
1. Little Grebe
2. Little Cormorant
3. Darter or Snake Bird
4. Spot-Billed Pelican
5. Large Egret
6. Purple Heron
7. Grey Heron
8. Black- Crowned Night Heron
9. Indian Pond Heron
10. Cattle Egret
11. Median Egret
12. Western Reef-Egret
13. Little Egret
14. Painted Stork
15. Oriental White IBIS
16. Eurasian Spoonbill
17. Greater Flamingo*(Sulur)
18. Spot-Billed Duck
19. Northern Shoveller
20. Black Kite
21. Brahminy Kite
22. Shikra
23. Common Buzzard
24. Changeable Hawk-Eagle
25. Black Eagle
26. Greater Grey-Fishing-Eagle
27. Grey Jungle Fowl
28. Indian PeaFowl
29. White-Breasted Water Hen
30. Common Moorhen
31. Purple Moorhen
32. Common Coot
33. Pheasant-Tailed jacana
34. Black Winged Stilt
35. Red-Wattled Lapwing
36. Wood Sandpiper
37. Common Sandpiper
38. Common Tern
39. Blue Rock Pigeon
40. Eurasian Collared Dove
41. Red Collared Dove
42. Spotted Dove
43. Little Brown Dove
44. Emerald Dove
45. Rose-Ringed Parakeet
46. Alexandrine Parakeet
47. Blue-Winged Parakeet or Malabar Parakeet
48. Indian Hanging Parakeet
49. Brain Fever Bird
50. Pied Crested Cuckoo
51. Asian Koel
52. Small Green-Billed Malkoha
53. Lesser Coucal
54. Greater Coucal
55. Barn Owl
56. Spotted Owlet
57. House Swift
58. Common Indian Nightjar
59. Lesser Pied Kingfisher
60. Small Blue Kingfisher
61. White-Breasted King Fisher
62. Black-Capped King Fisher
63. Chestnut-Headed Bee-Eater
64. Small Bee-Eater
65. Indian Roller
66. Common Hoopoe
67. Indian Grey Hornbill
68. Copper Smith Barbet
69. Black-Shouldered Wood Pecker
70. Common Golden-Backed Wood Pecker
71. Lesser Golden-Backed Wood Pecker
72. White-Cheeked Barbet
73. Red-Rumped Swallow
74. House Swallow
75. Brown Shrike
76. Black-Naped Oriole
77. Eurasian Golden Oriole
78. Black – Headed Oriole
79. Black Drongo
80. Greater Racket – Tailed Drongo
81. White-Bellied Drongo
82. Bronzed Drongo
83. Brahminy Starling
84. Common Myna
85. Jungle Myna
86. Common Hill-Myna
87. Indian Tree Pie
88. House Crow
89. Common Raven
90. Common Wood Shrike
91. Scarlet Minivet
92. Long-Tailed Minivet
93. Small Minivet
94. Common Iora
95. Jerdon’s Chloropsis
96. Asian Fairy- Bluebird
97. Red-Vented Bulbul
98. Red-Whiskered Bulbul
99. White-Browed Bulbul
100. Common Babbler
101. Jungle Babbler
102. Asian Paradise-Flycatcher
103. Ashy Prinia
104. Common Tailor Bird
105. Oriental Magpie-Robin
106. Pied Bushchat
107. Indian Robin
108. Black-Lored Yellow Tit
109. Forest Wagtail
110. Yellow Wagtail
111. Large Pied Wagtail or White Browed
112. Purple-Rumped Sunbird
113. Loten’s Sunbird
114. Purple Sunbird
115. Oriental White-Eye
116. House Sparrow
117. Baya Weaver
118. Spotted Munia
119. Black-Headed Munia
120. Asian Brown Flycatcher

காலை சைக்கிள் (மிதிவண்டி) பயணம் சென்ற போது:(05-11-2012)
PAINTED STORK - மஞ்சள் மூக்கு நாரை
ஒன்று குறிச்சி குளத்தின் நொய்யல் நீர் நின்ற பகுதியில் குனிந்த தலை எழுப்பாமல் , அவசர - அவசரமாக மீன்களை தேடி கொண்டிருந்தது ...!

வலைவிரித்து மீன்பிடிக்கும் மீனவனோ நாரையை துரத்த ,

நாரை பறந்து அருகில் உள்ள நொய்யல் ஆற்றுப்பாலத்தில் தரையிறங்கி இங்கு ஆறு ஒன்று இருந்ததே ?
என ஏமாற்றம் அடைந்து அருகில் உள்ள உக்கடம் பெரியகுளத்துக்கு மீன்கள் தேடி சென்றது !

என் மிதிவண்டியோ என் இல்லம் நோக்கி நகர்ந்தது...!
- நொய்யல் ஒப்பாரி பாடி உமேஷ்.ம


இரண்டு கரிச்சான் குருவிகள் (Black Drongo) பஞ்சுருட்டான்(Bee-Eater) குருவியின் உணவினை பறிக்க பறந்து போராடின,

வானம்பாடி பறவை விவசாயிகளின் வேலையை கவனித்தபடி மின்கம்பத்தில் அமர்ந்து இருந்தது!

பசுமை புட்கள் அசைந்தாடும் கரும்பாறைகள் நிறைந்த மலை,
பறவைகள் அமைதி தேடி வரும் மலை,
வன விலங்குகளுக்கு பாதுகாப்பான மலை,
அன்று பொழிந்த மழை நீரினை பாதுகாக்கும் புல்வெளிகள் கொண்ட மலை,
இயற்கை அன்னை நிரந்தரமாக குடிகொண்டுள்ள மலை,
செம்மண் பூமி - வறுமையின் நிறம் சிவப்பு

கிராமத்து சாலைகளில் என் பயணங்கள்:
இடம்: தீத்திப்பாளையம்-கோவை மேற்கு
(05-11-2012)


அமைதியான இரவிலும் இரவின் அமைதியை வென்றிடும் பறவைகளின் இசை !
ஒரு ஆனந்தமே


நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைதூர ரயில்வண்டி பயணம்
கோயம்புத்தூர் COIMBATORE முதல் to கோழிக்கோடு CALICUT(கேரளா மாநிலம்)
நண்பனின் உடன்பிறப்பின் திருமண நிகழ்ச்சி !
பாரதபுழா நதியை தொட்டுக்கொண்டு ஓடிய எங்கள் ரயில்வண்டி !
நண்பனின் வீட்டின் சுவரை உரசி உரசாமல் வானை நோக்கி சென்ற விமானம் !
கேரளத்து வயல்களில் குடிகொண்டுள்ள பறவைகள் !
நண்பர்கள் அனிருத் Anirudh S Iyer , அரவிந்த் , சதீஷ் Sathish Vp , திருஞானசம்பந்தர் Thiru Mtb அவர்களுடன் நான் ,
இதற்கு பிறகு என்ன சொல்ல ? 
நண்பர்களுடன் ஆட்டம் தான் !
உற்சாகமான நாள் (10-11-12)
கிராமத்து சாலைகளில் என் பயணங்கள்:
இன்று காலை(12-11-2012) உக்கடம் பெரிய குளத்தின் ஓரத்தில் நான் நடை பயணம் சென்ற போது
தூரத்தில் ஒரு மினி ஆட்டோ() ஒன்றில் குளத்தின் கரையில் கருப்பு/வெள்ளை சாக்குகளை கொட்டிக்கொண்டு இருந்தனர்
அருகில் சென்று பார்த்தால் அது ஞாயிறு மாமிச கடைகளின் கோழி , மட்டன் & மாமிச ரத்த கழிவுகள்
உடனே அருகில் இருக்கும் என் நண்பர்களை வரவழைத்து,
கோழி கழிவுகளை கொட்டுவதை தடுத்தோம்
மேலும் கொட்டிய கழிவுகளை எடுக்க செய்தோம் !
மேலும் நான் அந்த கூட்டத்துடன் அவர்கள் வாகனத்தில் சென்று
கோயம்புத்தூர் மாநகராட்சி சிவப்பு நிற குப்பை தொட்டியில் போட செய்தேன் !
குளமும் பாதுகாக்கபட்டது !
இனிமேல் நாங்கள் குப்பை கொட்ட மாட்டோம் என உறுதி அளித்தனர் !
அழைத்தவுடன் விடியல் காலையிலும் குளத்தினை பாதுகாக்க வந்த சூழல் நண்பர்களுக்கு நன்றிகள்
குளங்களின் பாதுகாப்பு குளத்தின் அருகில் வாழும் மக்களிடம் !


சுற்றுசூழலை பாதிக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை நான் சொல்ல விரும்பவில்லை!

சுற்றுசூழல் , பறவைகள் , வயதில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறன் உடையோர்களுக்கு இடையூறு செய்யாத தீபாவளி 
= பசுமை தீபாவளி !

காற்று மாசுபடுகிறது ,
சில பறவைகள் தனது கேட்கும் திறனை இழக்கின்ற !
கை குழந்தைகள் பயம் அடைகிறது ,
பட்டாசு வாங்க முடியாத ஏழை குழந்தைகள் தாழ்ந்து போகின்றன !
எனவே பசுமை தீபாவளி என்பது அவசியம் !

~ பசுமை தீபாவளி நல்வாழ்த்துக்கள் ~
இரவில் வன பகுதியில் எண்ணில் அடங்கா வண்டுகள் (பூச்சிகள்) என் உடம்பில் ஒட்டிகொள்கின்றன,
யானைகள் வாழும் காட்டில் இருளில் தனியாக நடந்து செல்லும் அனுபவமும் ஆனந்தமே !
மலைவாசி மக்களின் வீட்டில் ஆரோகியமான உணவு,
இரவில் சப்தமிடும் ஆள்காட்டி பறவைகள்,
பற்களை தாண்டவம் ஆடச்செய்யும் கடுமையான பனிமூட்டம் !
சொர்கமே என்றாலும் அது , இங்கு வாழ்வதை போல வருமா ?
- ஆனைகட்டி வன பகுதி (கோயம்புத்தூர்)
[16=11=2012]
யானைகள் எங்கள் ஆராய்ச்சி நிலைய கதவு அருகில் எப்பொழுதும் விளையாட ,
Elephants always Play Before My Research Institute Gate,
மலைவாசி மக்கள் சுவையான வன வாழ்க்கை அனுபவங்கள் என் செவிகளில் ,
Tribals shares their wild experiences,
விஞ்ஞானிகள் இயற்கை ஆராய்சிகளில் கற்ற பாடங்கள் எனக்கு கல்வியாக ,
Senior Scientist's explains their Field Observation with Nature,
பறவைகள் காதலிக்கும் , மரம் தாவி பறக்கும் சப்தம் ,
Birds Love & their Style of Flight,
பட்டாம்பூச்சிகள் பட்டம் வாங்கியது எங்கள் ஆராய்ச்சி நிலைய மலர்களின் உதவியுடன் ,
Butterflies do their Graduation along Guidence of Flowers,
காடு முழுவதும் காட்டு மலர்களின் வாசம் வீச ,
Forest Filled up with Blossoms,
என் பாதங்கள் இவைகளுடன் ஒன்றானது ,
My Legs always takes part with this,
வாழும் நாட்கள் இனிமையானது கோவையில் உயிர் வாழ்வதால் !
I Feel Proud to live in Coimbatore,
-இயற்கை என்றும் எனக்கு புதியது ;
இயற்கை விரும்பி,(Nature Observer)
உமேஷ் மருதாசலம்(Umesh Marudhachalam)


வன பகுதியில் மழை அளவு சற்று அதிகமாக இருந்தாலும்...!
துள்ளி விளையாடும் புள்ளி மான்கள் ,
வீரம் பொருந்திய காட்டு எருமைகள் , 
கம்பீரமான யானைகள் ,
நிற்பதிலும் , பறப்பதிலும் , பாடுவதிலும் அழகில் பல வண்ணமயமான பறவைகள் ,
தொலை தூரம் தாவும் முயல்கள் ,
என்னுடன் ஓடி விளையாடும் காடைகள் ,
சூரியனை மறைத்த மேகம் கூட்டங்கள் ,
பசுமை போர்த்திய மரங்கள் ,
மழையில் வானை பார்த்து தலை விரித்து சிரித்த இலைகள் ,
பூ பூத்த சாலைகள் ,
சாணம் உருட்டிய வண்டுகள் ,
பறவைகள் ஊஞ்சல் ஆடும் மின் கம்பங்கள் ,
புது வெள்ளம் ஓடும் தண்ணீர் பள்ளங்கள் ,
கவி பாடும் என் எண்ணங்கள் ,
உங்களுடன் உணர்வுகளை பகிர்கின்ற இந்த இணையதளம் ,
இவையாவையும் கோவையில் நாம் வாழ இயற்கை அன்னை நமக்கு படைத்த பொதுயுடைமை சொத்துகள் ,
-இயற்கை தினமும் எனக்கு புதியது ,
இயற்கை விரும்பி
~உமேஷ் மருதாசலம்~

நொய்யல் நதியின் கரையில் கோவையில் இன்று (25-11-2012)
நான் என் மூக்கினை அடைத்துக்கொண்டு :
காலையில் என் கால்கள் நடந்து செல்ல,
கரையின் ஓரம் குடிசைகள் நிறைந்த பகுதி அது ,
அங்கு வயதில் பெரிய அம்மையிடம்(கிழவியுடன்) நான் பாசமொழி பேச
அவள் கூறிய பதில்:
" எங்களுக்கு வாழ்வாதாரம் இந்த நதிதான் ,
நான் உணர்ந்த முதல் சுவை நொய்யல் நீரின் சுவைதான் ,
நதி ஓடிய ஓசை முப்பொழுதும் செவியில் பாய ,,,!
சிறுவயதில் நான் நீந்தி விளையாடியது இந்த காஞ்சிமா நதியில் தான்
இன்றோ நாங்கள் குளிக்க முடியாமல் வாரம் ஒரு முறை குளிக்கிறோம் ,
தாகம் தீர்க்க நீர் இல்லை ,
ருசித்து உண்ண ஆரோகியமான மீன்கள் இல்லை ,
அரசோ எங்கள் வீட்டினை அங்கீகரித்து குடிநீர் குழாய் வசதி அமைத்து தரவில்லை ,
இன்று நதியில் நல்ல நீர் இல்லை ,
நதியை நம்பி வாழும் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம் ...!
என்று அந்த பூமி தாய் எங்களை தன்னுள் அழைப்பாள் என்று ?
-நொய்யல் ஒப்பாரிபாடி
~உமேஷ் மருதாசலம்~

கருஞ்சிறுத்தை காணப்பட்டதாக கூறப்படும் நேற்று மாலை - அதே நேரத்தில் , நான் பறவைகள் ஆராய்ச்சியில் அதே சிறுவாணி வனபகுதியில் தான் இருந்தேன் !
தொலைதூரத்தில் மூன்று புலிக்குட்டிகளை காண வாய்ப்பு கிடைத்தது !
காட்டுயானைகள் மிக அருகில் நின்று சென்றன ...!
மாலை சாடிவயல் திரும்பிய போது வனகாப்பாளர் கருஞ்சிறுத்தை பார்த்ததை கூறினார் நல்ல மகிழ்ச்சியான செய்தி !
போளுவாம்பட்டி வனசரகம் பறவைகள் , விலகுகளுக்கு உகந்த பாதுகாப்பான பகுதியாக இருக்கிறது ...!


அன்று வன விலங்குகளின் தடையங்களை காண தலை குனிந்து நடந்த சென்ற என் நாட்கள்,
இன்று வான் உயர பறக்கும் வண்ணப்பறவைகள் என்னை தலை நிமிர்ந்து பார்க்கவைத்தன !
இயற்கை என்றும் எனக்கு புதியது
இயற்கை விரும்பி
-உமேஷ் மருதாசலம்


கோயம்புத்தூர் மாநகரில் உள்ள நொய்யல் குளங்களை எப்படி தூய்மையாக்குவது, அழகுபடுத்துவது என தமிழக அரசு யோசிப்பது இல்லை ,
எப்படி ________ ?,
எப்படி குளத்தினை மூடுவது ?,
எப்படி மணல் திருடுவது ? ,
எப்படி மரங்களை வெட்டுவது ?,
எப்படி குளத்தினுள் பேருந்து நிலையம் அமைப்பது ?,
எப்படி பாலங்களை குளத்தினுள் உயர்த்துவது ? ,
எப்படி சாக்கடை நீரினை குளத்தினுள் கொண்டு செல்வது ?,
எப்படி திட்டத்தின் மூலம் நிறைய பணம் பார்ப்பது ?,
எப்படி மக்களின் ஓட்டு வங்கியினை பெறுவது ?,
என இன்றைய அரசு தொலைநோக்கு திட்டத்துடன் செயல் படுகிறது !
வாழ்க இத்தகைய அரசு , மூடுக கோவை குளங்கள் !
ஒழிக கொங்கு மக்கள் !
-நொய்யல் ஒப்பாரி பாடி


பிளாஸ்டிக் , மது பாட்டில்களை வன பகுதியில் இருந்து நீக்கும் அறச்செயல் செய்த பண்ணாரி அம்மன் கல்லூரி பசுமை படை மாணவர்களுக்கும் ,
காட்டின் நாயகர்கள் , களப்பணியாளர்களான வேட்டை தடுப்பு காவலர்களுக்கும்
மேலும்
இந்த புண்ணிய செயல் ஆற்ற எம்மை அழைத்த கல்லூரி நிர்வாகத்தினருக்கு நன்றிகள் !
Anti-Plastic Awareness Campaign @ SATHYAMANGALAM Forest Division(02-12-2012)
along with students of Bannari Amman Institution in Bannari-Sathyamangalam Range of Forest !
Thanks for BIT Institution for inviting me to co-ordinate this Programme


கோவையில் மழை கைவிட்ட நிலையில் , இனி மழை பொழியும் என நம்பிக்கை இல்லை ,
வரட்சியில் வாடும் நொய்யல் நதிக்கு கேரளாவில் (பாலக்காடு) இருந்து நீர் கொண்டுவந்தால் என்ன ?
பாரதபுழா நதிநீரினை கொஞ்சம் கோவை பக்கம் திருப்பினால் என்ன ?
வாளையார் அணை நீரினை நொய்யல் நதி பக்கம் அனுப்புங்கள் ,
இன்று நொய்யல் நதி மாசுகளால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது ,
இன்று நொய்யல் குளங்கள் வறட்சியில் மண் வெடித்துவிட்டன ,
இன்று நொய்யல் நதியினை நம்பி பயிர் செய்த தாவரங்கள் வறண்டு போயின ,
-நொய்யல் நாடி - விரும்பி,
~ உமேஷ் மருதாசலம் ~


நேற்று யானை சாணத்தின் மீது விழுந்த மழைத்துளிகள் மறுநாள்
காளானாக மாறி ஆமைகளுக்கு உணவாவதை போல ,
இலையின் மீது தவழும் மழைத்துளிகள் நொடிப்பொழுதில் மரத்தினை மகிழ்விப்பதை போல ,

என் கண் இமை அருகில் ஆடிப்பறந்து என்னை மகிழ்விக்கும் பறவைகளும் , பொன்வண்டுகளும் என்றும் இந்த பூமியில் நீங்கா புகழ் உடையது !
~ இயற்கை என்றும் எனக்கு புதியது ~
இயற்கை விரும்பி
- உமேஷ் மருதாசலம்


ஏன் ?பறவைகளுக்கு சிறகு முளைத்தது?
கட்சி விட்டு கட்சி தாவவா , இல்லை ?
மரங்களில் சுவையான பழங்களை உண்டு,
அதை காடு முழுவதும் பறந்து சென்று விதைகளாய் எச்சங்களில் தூவி,
மரங்களை உண்டாக்கும் காட்டின் விவசாயிகள் !

புள்ளிப்புறாக்கள் என்னை கண்டு திடீர் என சிறகடித்து பறக்கும் ஓசை , காட்டின் நடுவில் நடந்து செல்லும் எனக்கு மேலும் ஒரு பீதியை உண்டாக்குகிறது ...!

என்னை கண்ட மான்கள் கூட்டமாக ஓடின பாதுகாப்பான இடம் தேடி ...!

யானைகள் நகர்ந்தன நீர் நிறைந்த குட்டைகளை தேடி ...!
ஆந்தைகள் மறைந்தன அமைதியான இடம் தேடி ...!
எறும்புகள் பாறையில் ஊர்ந்தன உணவின் வாசம் தேடி ...!
பட்டாம்பூச்சிகள் பறந்தன சுடரும் மலர்களை தேடி ...!
அணில்கள் ஓடின பழங்கள் நிறைந்த மரங்களை தேடி ...!
நானும் , என் சுவாச மூக்கும்,
இவைகளை சுடரிட்டு காட்டும் கண்களும் நகர்ந்தன காட்டில் இவைகளின் வாசம் தேடி ...!
~இயற்கை என்றும் எனக்கு புதியது~
காட்டின் விரும்பி
-உமேஷ் மருதாசலம்

கிராமத்து சாலைகளில் என் பயணங்கள் (10-12-2012)
இதுவரை நான் கண்டிதாத
வண்ணமயமான பறவைகள் , கலாச்சாரம் ,
என் சிவபெருமான் அருளும் கோவில்கள் ,
மக்களின் நற்பண்புகள் ,
செட்டிநாடு அரண்மனை வீடுகள் , !
ஐந்து நேர உணவு வகைகள் என
மூன்று நாட்கள் தேவக்கோட்டை , காரைக்குடி , செட்டிநாடு , பகுதியில் உணர்ந்தேன் ...!

என் கல்லூரி நண்பர்களுடன் தொலைதூர பயணம் , தோழியின் உறவினர்கள்... என வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள் இங்கு பதிந்தது !!!

இவை யாவும் காண எங்களை அழைத்து உபசரித்த என் தோழிக்கு நன்றிகள் மட்டும் சொன்னால் போதுமா ???
நல்ல நட்பின் இலக்கணத்தை என் தோழியின் கண்களில் கண்டேன் ...!

குறிச்சி குளத்துக்குள் ஆட்டோ வா ?(12-12-2012)
காலையில் குறிச்சி குளத்தினுள் இன்று நின்று கொண்டிருந்த ஒரு மினி ஆட்டோ என் கண்களில் தென்பட்டது ,
மீன் பிடிக்க வரும் சிறுவனை போல அருகில் சென்று நோட்டம் போட்டேன் -
வண்டி முழுவதும் பழைய வீடு இடிக்கப்பட்ட செங்கல் கலந்த பழைய மண் இருந்தது ,
சற்று வேடிக்கை பார்த்து காத்திருந்தேன் ,
சிலநபர்கள் மண்ணினை கொட்ட மண்வெட்டியை கரம்பிடிக்க ,
நானோ இது போன்ற மண் கொட்ட இந்த குளத்தில் விடபோவதில்லை என உரக்கச்சொல்ல ,
அவர்கள் போராடி அருகில் இருக்கும் அடுத்த குளம் தேடி சென்று கொட்டிவிட்டு மறைந்தனர் !
என்று குளங்களுக்கு குப்பைகளில் இருந்து சுதந்திரம் கிடைக்கும் ?
- நொய்யல் குளம் விரும்பி ,
உமேஷ் மருதாசலம்


பிறந்து ஐந்து நாட்களான குட்டி யானை ஒன்று-
மூன்று யானைகள் சூழ இரவில் என் ஆராய்ச்சி நிலைய ஜன்னல் அருகில்
புளியமரத்தின் சுவையை உணர்ந்தது !
காலையில் குட்டியுடன் மான் கூட்டம் ஒன்று
புதரில் அமைதியாக மறைந்தது !
காட்டுக்கோழி விடியலை எனக்கு உணர்த்த கூவியது !
காலையில் நடைபயணம் சென்ற பாதையில்
யானை சாணம் மனம் இருந்தது ,
விடியல் காலையில் பனிதுளிகள் விட்டுச்சென்ற
ஈரம் தாங்கிய புல்வெளிகள் !
என்னை கண்டதும் தன் காதல் ஜோடியுடன்
பறந்த புள்ளிப்புறாக்கள் !
காய்ந்த மரத்தில் விடியலை நோக்கி
காத்திருக்கும் ஒரு கழுகு !
சேற்றில் பிறழும் பன்னிகள் !
என இன்றைய விடியல் புதியது
~உமேஷ் மருதாசலம் ~


ஓயாத காற்றில் ஆடும் மேகங்கள் !

மேகங்களின் நிழலை தாங்கிப்பிடிக்கும் மலைத்தொடர்கள் ,

குடை விரித்த மரங்களின் நடுவில் பறவைகள் எழுப்பும் சங்கீத மழை ,

பள்ளத்தில் ஓடி ,பாறைகளில் பட்டு மேலே தாவ முயற்சிக்கும் மலை காட்டு ஓடைகள் ,

இவை மீது சுடரைக்காட்டும் தீயில் ருத்ர தாண்டவம் ஆடும் சூரியன் ! என
இயற்கை என்றும் எனக்கு புதியது
~உமேஷ் மருதாசலம்~
வாழ்க வளமுடன்


உன்னை விட்டு ஒரு நொடி நீங்கிச்செல்ல மனம் இல்லை தூய-குளிர்ந்த சுவாசம் தரும் காட்டு ஆலமரமே !

கோயம்புத்தூர் போகலாமா ? வேண்டாமா ?
கும்கி திரைப்படம் பார்க்கும் போது ஏன் ?
என் கண்களில் நீர் வடிந்தது , அது ஏன் ?

கோவையில் சாடிவயல் யானை முகாமில் உள்ள நஞ்சன்(55) மற்றும் பாரியுடன்(34) சில நாட்கள் அருகில் இருக்க வாய்ப்பு கிடைத்தது .

கும்கியின் பாகன்கள் - விஜய் மற்றும் ராம் போன்றவர்களிடம் நேரடியாக சிறுவயது முதல் இன்றுவரை கும்கியுடன் குடும்பமாய் வாழும் இவர்கள் மற்றும் இவர்களின் மனைவி-மக்கள் !!! என இவர்களின் உறவின் ஆலத்தை உணர - உணர கண்களில் இதுப்போல வாழ ஆசை தூண்டியது .

காட்டு யானையுடன் கும்கியானையை இவர்கள் மோதவிடும் போது !
மோதலில் வெற்றி என்பது ஒரு ஜீவனுக்கு மட்டுமே பெறமுடியும் ,
#உயிர் பிழைத்து வாழ்வதும் ஒரு ஜீவன் மட்டும் தான் என்பது சண்டையின் தீர்வு / முடிவு !

இந்த வரிசையில் கும்கி திரைப்படம் இந்தியாவில் யானைகளின் நிஜ உலகில் நடக்கும் சம்பவங்களை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறது !

முக்கியமாக மனித யானை மோதல் முதலில்,
ஏன் ? எப்படி ? உண்டாக்கப்படுகிறது என தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது !

கும்கி திரைப்படம் வெற்றிபெற வேண்டிய திரைப்படம் , முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலை அருகில் வாழும் மலை-கிராம மக்களின் வாழ்க்கையை படமாக்கப்பட்டுள்ளது !

வாய்ப்பு கிடைத்தால் கும்கி திரைபடத்தை காதலுடன் விரும்பி பாருங்கள் !

மீண்டும் - மீண்டும் பார்க்க துடிக்கிறேன்
கும்கி படம் சுவையாக உள்ளது !

யானை விரும்பி
~உமேஷ் மருதாசலம்~

பெண்கள் என்பவள் இந்திய ரயில் தண்டவாளத்தில் பூத்த வெள்ளை மலரை போன்றவர்கள் ,
அழகில் மயங்கி , வாசனை நுகர செல்பவர்களை அடித்துச்செல்லும் அதிவிரைவு ரயில் வண்டிகள் !

# ரயில் தண்டவாளம் நிலையானதுதான் , பறவைகள் கூட நிலையாக கூடுகட்டி வாழமுடியாது !

பூமியில் வாழ்க்கை நிலையற்றது !

இயற்கை விரும்பி

~உமேஷ் மருதாசலம்~

வனபகுதியில் உள்ள நீர் குட்டையில் ஒற்றுமையாய் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் காலை-மாலையில் நீர் அருந்த வருவதை

மனிதராய் நாம் அதில் மறைந்திருக்கும் சமத்துவம் / ஒற்றுமையை கற்றுக்கொள்ள வேண்டும் !
வனபகுதியில் வாழும் விலங்குகளுக்கு இடையே உயர்வு - தாழ்வு மனப்பான்மை இல்லை !

# நீர் குட்டையின் அருகில் மரத்தின் மீது மறைந்து இருந்து ஒரு சமத்துவ பாடம் பிறந்தது ...!

சமத்துவம் விரும்பி

~உமேஷ் மருதாசலம்~


Attending Ornithology Course at Salim Ali Centre For Ornithology And Natural History (SACON), Coimbatore...!
Scientist share their knowledge's & their Views in the World Of Birds , Wildlife , Trees (Flora & Fauna)...!of INDIA & other Bio-Diversity Rich Nations...!
I am much more Eager to make some Research or some Brief Study on Indian Ornithology...!
Let the God Gives me Opportunity for it .

பறவைகள் , மரங்கள் போன்ற இயற்கை சொத்துக்களை ஆராய்சிகளின் மூலம் படித்துஉணர ஆவலாக இருகிறேன் ...!
களத்திலும் செயல் பட துவங்கிவிட்டேன் ...!

இயற்கை அன்னையின் துணைநின்று அருள் தருவளாக !
-இயற்கை என்றும் எனக்கு புதியது ;
இயற்கை விரும்பி,(Nature Observer)
உமேஷ் மருதாசலம்(Umesh Marudhachalam)


குளத்தின் கரையில் இன்று நின்று விடியலை உணர்ந்த போது (19-12-2012)
மீன்கொத்திப் பறவை இரண்டு நீரில் மீனை கவ்வ குளத்தில் குதித்தன ...!
சிறிய அளவிலான நீர் பறவைகள் தென்பட்டன ,
நாய்கள் நீரில் நீந்தும் வாத்துகளை துரத்தின ,
சூரியனோ நகரில் மலர்ந்தது , விடியல் பூத்தது...!
குளிர்ச்சி வாடியது !!!
மாலை சூரிய மறைவில் !
அரசுப்பள்ளி மாணவர்களுடன் பேருந்தில் பயணம் ,என்னையும்
பள்ளிப்பருவ சேட்டைகளை செய்யவைத்தது !
இரண்டாம் வகுப்பு மாணவி
இந்த அண்ணனுக்கு தந்த வத்தல் சுவை எச்சில் ஊறியது !
மேலும் ஒன்று கிடைக்குமா என்று ஏங்க வைத்தது , நான் அவளுக்கு அண்ணன் அவள் உண்ணட்டும் என மனதை ஆறுதல் படுத்தினேன் ...!
-பேருந்து பயணம் - கூட்டு/சமத்துவ பயணம்
உமேஷ் மருதாசலம்


ஏன் ? இந்த நிலையோ எங்கள்
நொய்யல் அம்மாவுக்கு ?(20-12-2012)
கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லையில் உள்ள நொய்யல் குளங்கள் வறட்சியில் வாடி/வெடித்துவிட்டன ,
நொய்யல் நதியில் நீர் ஓடி சரியாக ஒரு வருடம் மேல் கடந்துவிட்டது ,
நிலத்தடி நீர்மட்டம் பாதாள உலகம் வரை சென்றது ,

பணம் படைத்த சக்திகள் நொய்யல் ஆற்றில் மணல் அள்ளிவிட்டன ,
நொய்யல் ஆற்றில் மணல் திருடி பல மாளிகைகள் உயர்ந்தன ,

நீர் விளையாட்டு பூங்காவும் , குடிநீர் வியாபாரம் செய்யும் கும்பலும் நொய்யல் நீரினை கோவை மாநகரம் செல்ல தடுத்தன / தடைசெய்தன,

ஆக்கிரமிப்புக்கள் எல்லை மீறி இருக்கின்றன ,

குளங்களில் எல்லாம் களைச் செடிகள் கட்டுகடங்காமல் வளர்ந்துவிட்டன ,

பல மாநகர குளங்கள் கழிவு நீரினை மட்டுமே பலவருடங்களாக சுமக்கின்றன ,
குளத்து நீரில் தாதுக்களை சமன்பாடு செய்யும் கருவேலமரங்கள் அனைத்தும்
வெட்டப்பட்டு விட்டன ,

குளத்தினுள் பேருந்து நிலையம் கட்ட பணி தொடங்கிவிட்டன ,

மாமிசகழிவு , கட்டிடக்கழிவு , பிளாஸ்டிக்கழிவு ,தொழிற்சாலை கழிவுகள் என
நீர் சுமந்த குளங்கள் எல்லாம் இன்று கழிவுகளை சுமக்கின்றன !

வெளியூர் பறவைகளும் இந்த வருடம் கோவையில் நீண்ட நாட்கள் தங்கவில்லை -
சில பறவைகள் வரவுமில்லை ,
நீர் பறவைகளின் வேட்டை எல்லை மீறின ,
மீன்கள் விஷம் பாய்ச்சிய நீரில் செத்து மடிந்தன ,
நெடுஞ்சாலைகள் குளத்தின் கரைகளில் எழுந்தன ,
இவையாவையும் சீர்செய்ய
அரசாங்கம் என்ன செய்தன ?
ஏன் இந்த நிலையோ எங்கள் நொய்யல்அம்மாவுக்கு ?
-நொய்யல் ஒப்பாரி பாடி
நொய்யல் குளம் விரும்பி,
~உமேஷ் மருதாசலம்~

யானைகள் கூட்டமாக நான் உணவருந்த செல்லும் வழியில் இருப்பதை என் சுவாசம் உணர்த்தியது !

என் கால்களை சப்தம் செய்யாமல் நகர்ந்து உண்ட பின் திரும்பினேன் !

ஆராய்ச்சி நிலையத்தில் நண்பர் ஒருவர் மாலை சிறுத்தை பார்த்தாய் கூறினார் !!!

# எதுவும் கண்கள் காணவில்லை ஆனால் அவைகள் அருகில் இருப்பதை உணரமுடிந்தது ...!

கீரிப்பிள்ளை ஒன்று ,
என்னை தொலைவில் நின்று தலை நிமிர்ந்து பார்க்க ,
நானோ அசைவற்று நிற்க ,
சிறிது நேரம் அதன் செயல்பாட்டினை உற்றுநோக்கினேன் ,
புள்ளிப்புறாக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருக்க என் செருப்பின் சப்தமோ அவைகளை பயமுறுத்தி பறக்கச்செய்ய ,
சற்றுமுன்பு போட்ட யானை சாணம் ஈர வாசம் அடிக்க ,
கழுகுகள் நான்கு என் கண் எதிரே வட்டமிட ,
சுடச்சுட காலை உணவு உண்டபின் அலுவலகம் நோக்கி சென்றது என் கண்கள் !!!
இன்றைய காலை புதியது
காலை வணக்கம்
~உமேஷ் மருதாசலம்~

ஆனைகட்டி வனபகுதியில் வன விலங்குகள்
நீர் அருந்துவதற்காக கட்டப்பட்ட இரண்டு 
நீர் தொட்டியினை மாதம் ஒருமுறை தவறாமல்
சுத்தம் செய்யும் பணியில்.ஈடுபட்டிருக்கும்
என் ஆராய்ச்சி நிலைய நண்பர்கள் !
சுரேஷ் மாரிமுத்து ,கிருபா நந்தினி ,மகாராஜன் ,நம்பிராஜன் ,
மற்றும்
ஆராய்ச்சி நிலைய நல் உள்ளங்கள் !
மரம் நட்டு சென்றவர்கள் கூட நீர் விட மாட்டார்கள் ஆனால் யாரோ நட்ட மரங்களுக்கு,
இவர்கள் தினமும் தவறாமல் நீர் ஊற்றி வளர்கின்றனர் !
இவர்களுடன் ஒரே அறையில் தங்கி
உறங்கி ,உணவு உண்பது நான் செய்த பாக்கியம் !
வாழ்க நல் உள்ளங்கள் பல்லாண்டு - வாழ்க வளமுடன்