copyrights @ umeshmarudhu-2012
(1000th Day of my college Life)
இது ஆயிரம் நாட்கள் மட்டும் அல்ல ?
(1000th Day of my college Life)
இது ஆயிரம் நாட்கள் மட்டும் அல்ல ?
என் தாயின் மடியில் அமர்ந்து,அவள் ஊட்டிய உணவின் சுவைக்கு நிகரான, தித்திப்பான ஆயிரம் சுவைகளை கலந்தது !
இது நிமிடங்கள் மட்டும் அல்ல ?
ஒவ்வொரு நிமிடமும் காதல் , அன்பு , உரிமை , பாசம் , நட்பு என ஆயிரம் உணர்வுகள் கலந்த கலவை நொடிப்பொழுதுகள் !
என் ஆசிரியை விரிவுரைத்து பாடம் மட்டும் அல்ல ?
நான் முன்னேற அவர்கள் செதுக்கிய வெற்றிப்படிகள் !
அகம் காத்து , புறம் காத்து - நான் மகிழ தூய்மைக் காத்து , பசுமை காத்து புன்னகையுடன் பூக்களாக மலர்ந்து நறுமணம் தந்த ஆயிரம் அலுவல் களப்பணியாளர்கள் தான் என் சுவாசக்காற்று !
நான் நாள் தோறும் வந்துசெல்ல சாலைகளாக தலை கொடுத்து மடிந்த ஆயிரம் நாற்றுகள் !
மனித - கணித மோதல்களுக்கு போர்க்களம் அமைத்து ஆயிரம் வெற்றித்தீர்வுகள் தரும் ஆய்வுக்கூடங்கள் !
இத்தனை நொடிகள் , நிமிடங்கள் , நாட்கள் அத்தனையும் நான் வளர வகுத்த பாசப்படிகள் !
பஞ்சுப்போன்ற மெத்தை மேனியுடன் துளிக்குதிக்கும் பெண் மான்கள் ஆயிரம் !
சீறும் சிறுத்தையாக சினம் கொண்டு ,
சுவையான இன்னல்கள் தந்த நீ நண்பேண்டா !
உன்னுடன் ஆயிரம் நாள் கடந்தேண்டா !
மகிழ்ச்சியுடன் ஆயிரம் நன்றிகளுடன் உங்கள் நண்பன்
- ம.உமேஷ்
No comments:
Post a Comment