Labels

நொய்யல் கண்ணீர் (26) எப்போது தீரும் சோகம்? (18) Awareness Talks (12) Village Visit-2013 (9) coimbatore nature (9) நொய்யல் என ஒரு நதி (8) BioDiversity (7) Coimbatore Lakes Condition-2011 (7) About Me (6) coimbatore birds (6) கவிதை தட்டுபாடு (5) Birds for Sale (4) Kovai Birds (4) Kovai Issues on Trees (4) My Coimbatore (4) save nature (4) Bird Watching-2013 (3) Umesh in Media (3) என் வீட்டில் குருவிகளும் வாழும் (3) கோயம்புத்தூர் மாவட்ட பறவை இனங்கள் (3) கோவை தியாகிகள் :உள் உணர்வுகள் (3) Bannari Amman Institution (2) Bird Watching-2012 (2) Kurichi Lake/Wetland (2) Lokpal issues (2) Osai Enviro Meet (2) PSG கல்வி நிறுவன மாணவர்களுடன் கோவை குளங்களை பற்றி(08-08-2012) (2) Save our Tigers (2) Something to Feed (2) இனி அழிந்து (2) கல்லூரியில் ஆயிரம் நாட்கள் (2) திருக்குறள் (2) யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு (2) லண்டனா கேமெரா உண்ணிச் செடி (2) +2 தேர்வு அட்டவணை 2012 (1) Coimbatore Bird Race (1) Driving Rules (1) Heritage of Kovai (1) Honour's by Officials (1) King Cobra Rescue Operation - December 2011 (1) NSS Camp of TNAU-May-2012 (1) Plastic Free Vellingiris-2012 (1) Silent valley Guide (1) Tree Protection Committee meet (1) human elephant Conflict (1) noyyal river (1) vote for i.v(2011) (1) அனைவருக்கும் கல்வி அவசியம் (1) உலக தண்ணீர் தினம்-2012 (1) எங்கும் தமிழ் (1) எதிலும் தமிழ் (1) என் வீட்டில் ரோஜா வனம் (1) எப்போது தீரும் வால்பாறை சோகம்? (1) கொள்ளைப்பாதை (1) சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு(06-07-2012) (1) சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (1) பிளாஸ்டிக் அரக்கனை கொல்ல முடியாது (1) மண்ணுக்கு உரமானாவர் (1) மனம் கவர் மதுரை (1) மரக்கன்றுகள் நடப்பட்டது (1) மறையும் மதுரை (1)

Monday 19 January 2015

அனைவருக்கும் கல்வி அவசியம்

அரசுப்பள்ளியில் இன்று ஆறு , ஏழு , எட்டாம் வகுப்பு மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தேன் . . .
பொங்கல் பண்டிகையில் ஒவ்வொருவரின் கொண்டாட்டங்களை சுவையாக பகிர்ந்தனர் ,
சரி இது ஒரு புறம் இருக்கட்டும் ஒரு மாணவியிடம் உனது பெயரை கரும்பலகையில்" தமிழிலும் - ஆங்கிலத்திலும் எழுத்து என சுண்ணக்கட்டியினை கையில் தந்தேன் , , , எனக்கு எழுத-படிக்க தெரியாது என தயங்கினால் . . .
அடுத்து இன்னொரு மாணவனை எழுதக்கூறினேன் , தமிழில் தனது பெயரை எழுத்துப்பிழைகளுடன் தவறாக எழுதினான் பரவாயில்லை ஆங்கிலத்திலாவது எழுது தம்பி என வாய்ப்பு தந்தேன் தெரியாது என சென்று அமர்ந்துகொண்டான் , , ,
அறுவது மாணவர்கள் படிக்கும் வகுப்பில் பத்துக்கும் குறைந்த மாணவர்கள்தான் சரளமாக எழுத படிக்க இயல்கிறது . . .
வருத்தமாகத்தான் இருந்தது அது சரி , எழுத்து அறிவும் ? படிப்பறிவும் ? நமக்கு தேவைதானா ? என அவர்களிடம் கேட்டேன் . . . "வேண்டவே வேண்டாம்" என சந்தோசமாக உரக்கக்குரல்கள் எழும்பின . . .
செய்தித்தாள் படிப்பீர்களா ? செய்திகளை கேட்பீர்களா ?
ஆம் , கொலை / கொள்ளை கடத்தல் நடிகரின் பேட்டி என பதில் வந்தது , ஏன் ? வேறு செய்திகள் தேடித்பார்த்தோம் இல்லை என்றனர் ???
ஆறு 6, ஏழு 7, எட்டு 8, ஒன்பது 9 ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவர்கள் நாடு முழுவதும் பரவலாக இப்படிதான் இருகின்றனர் என எங்களது ஆய்வு முடிவு கூறுகிறது .
# எனது பார்வையில் அரசுப்பள்ளியில் 95% சதவீதம் குழந்தைகள் இலவச மதிய உணவு திட்டத்தில் ஒரு வேலையாவது உணவு கிடைக்கிறதே ! ! !
இலவச சீருடை , புத்தகம் , காலணி , நிழலில் இருக்க ஒரு கூரை அறை என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் , கூலி வேலையில் இருந்து தற்காலிகமாக தப்பிகின்றோம் என ஆறுதலுக்காக பள்ளியில் அடைக்கலம் நாடும் பிஞ்சு விரல்கள் . . .  இதற்கு ஆசிரியரை குறை கூறுவது ஒருபுறம் இருக்கட்டும் , பரவலாக அரசுப்பள்ளியில் அதிக எண்ணிகையில் சராசரியாக 1:80 மாணவர்கள் ஒரு வகுப்பில் இருக்கின்றனர் , ஒரு ஆசிரியறினால் எப்படி சிறப்பு கவனம் செலுத்த முடியும் ? கல்வியாளர்கள் 1 ஆசிரியர் : 30 என்ற விகிதத்தை கடைபிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது , பல மாணவர்கள் பள்ளிகளில் ஓட்டை சுவர் , துருப்பிடித்த மேஜை , சுகாதாரமற்ற வகுப்பறை / கழிவறை , அடிப்படை வசதிகள் இல்லாதது ,,, தொடர்ந்து குறும்புகள் செய்யும் குழந்தைகளை கண்டிக்கவோ அடிக்கவோ அல்லது சிறுதண்டனைகளையோ மாணவர்களுக்கு கூற முடியாது , கொஞ்சம் கண்டித்தால் கூட மாணவர்கள் காவல்துறையிடம் / பொறுப்பு அதிகாரியிடம் வன்கொடுமை / தாக்குதல்கள் என சமூகம் விஷமிகளை அவதூறாக பரப்புகிறது ஒரு கூட்டம் . . .
வகுப்பறைகள்/விளையாட்டுகூடம் கூட இல்லாத பள்ளிகளை அந்த அந்த மாவட்ட நிர்வாகம் கவனிக்காத ? மேலும் மாணவர்களின் அளவினைப்பொருத்து ஆசிரியர்களை நியமிப்பது போன்ற நிர்வாக இடைவெளியினை கல்வித்துறை குழு கண்டறிந்து நிவர்த்திசெய்யவேண்டும் , , , இப்படி பலவற்றை விவாதிக்கலாம் . . . 
^ இன்னும் எனது பார்வையில் இன்றைய பள்ளிகளில் மாணவர்களின் நிலைமை என சமயம் கிடைக்கும்போது எழுதுகிறேன் . . .
# அனைவருக்கும் கல்வி அவசியம் #
copyrights @ umeshmarudhu-2015 ~Save Nature For Future~

1 comment:


  1. Hii, This is Great Post !
    Thanks for sharing with us!!!!


    Digital marketing agency in chennai
    Best SEO Services in Chennai
    seo specialist companies in chennai
    Best seo analytics in chennai
    Expert logo designers of chennai,
    Brand makers in chennai

    ReplyDelete